கொரோனா 3வது அலை பரவல் தொடக்கம்?... இந்திய விஞ்ஞானியின் பகீர் எச்சரிக்கை...!

கொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகள் திண்டாடி வரும் நிலையில் பிரிட்டனில் விரைவில் 3வது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

UK in early stages of 3rd wave of coronavirus, warns Indian-origin scientist

உலகத்தையே உலுக்கி எடுத்த கொரோனா பரவலால் வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை கடந்த ஆண்டு கடும் பாதிப்புகளை சந்தித்தது. 2021ம் ஆண்டு தொடக்கம் முதலே பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு  திரும்ப ஆரம்பித்தன. ஆனால் மீண்டும் கொரோனா 2வது அலையின் கோர தாண்டவம் உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்தது வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

UK in early stages of 3rd wave of coronavirus, warns Indian-origin scientist


கொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகள் திண்டாடி வரும் நிலையில் பிரிட்டனில் விரைவில் 3வது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 12ம் தேதிக்கு பிறகு பிரிட்டனில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக மூன்றாயிரத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது.  இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேம்பிரிட் பல்கலைக்கழக பேராசிரியர் ரவி குப்தா என்பவர் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது போல தெரிந்தாலும் பி 1617 என்ற புதிய ரக வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

UK in early stages of 3rd wave of coronavirus, warns Indian-origin scientist

எனவே வரும் 21ம் தேதியுடன் ஊரடங்கை தளர்த்திவிட கூடாது என்றும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனை கேட்டுக்கொண்டுள்ளார்.  தற்போது எண்ணிக்கை மிக குறைவாக காணப்பட்டாலும் அனைத்து அலைகளும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பரவலை தொடங்குகிறது என்பதையும் ரவி குப்தா சுட்டிக்காட்டியுள்ளார். பிரிட்டனில் கொரோனா 3ம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் எச்சரித்துள்ளார். ரவி குப்தா பிரிட்டன் அரசின் புதிய மற்றும் வளர்ச்சிபெறும் சுவாசம் தொடர்பான வைரஸ் அச்சுறுத்தல் குறித்து ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios