பிரிட்டனில் முதல் முறையாக மனிதருக்குப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு!
பன்றிகளில் பரவும் ஸ்வைன் ப்ளூ என்ப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் முதல் முறையாக மனிதர் ஒருவரைப் பாதித்துள்ளது என பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பன்றிகளில் பரவும் A(H1N2)v என்ற வைரஸ் முதல் முறையாக மனிதரைப் பாதித்துள்ளதைக் கண்டறிந்துள்ளதாக பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் விரைவில் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறது.
பிரிட்டன் சுகாதார அமைச்சகத்தின் கீழ், தேசிய காய்ச்சல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது.
ஆனால், நோய்த்தொற்று எப்படி ஏற்பட்டது என்று இன்னும் அறியப்படவில்லை.
சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய முயன்று வருகின்றனர். நோர்த் யார்க்ஷயரில் உள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இங்கிலாந்தில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பைக் கண்டறிவது இதுவே முதல் முறை. இது பன்றிகளில் கண்டறியப்பட்ட வைரஸ்களைப் போலவே உள்ளது" என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் மீரா சந்த் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள பன்றிக்காய்ச்சல் தொற்று, 2005 முதல் உலகளவில் வேறு இடங்களில் கண்டறியப்பட்ட பன்றி காய்ச்சல் நோய்த்தொற்றுகளிலிருந்து வேறுபட்டது. 2009ஆம் ஆண்டில் உலக அளவில் பரவிய இந்த வைரஸ் லட்சக்கணக்கானவர்களைப் பாதித்தது.
சக மாணவரை 108 முறை காம்பஸால் குத்திக் கிழித்த 4ஆம் வகுப்பு மாணவர்கள்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D