Asianet News TamilAsianet News Tamil

ஆண்டுக்கு ஒரே ஒரு இரவு மட்டுமே வீட்டில் தங்கும் கணவன்…. 40 வயதில் 44 குழந்தைகளை பெற்றெடுத்த மனைவி…. ஆச்சர்யம்… நீங்களே பாருங்களேன்!!

உகாண்டாவில் பல மனைவிகளை திருமணம் செய்துள்ள கணவர் ஒருவர் தனது இரண்டாவது மனைவி வீட்டுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வந்து போகும் நிலையில் அந்தப் பெண் தனது 40 வயதில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவர் உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த தாய் என அழைக்கப்படுகிறார். நிம்மதி இன்றி தவிக்கும் இவர் தனது வாழ்வே சோகம் நிறைந்தது என தெரிவித்துள்ளார்.

Uganda a lady gave 44 children in her 40 age
Author
Uganda, First Published Oct 23, 2018, 9:40 PM IST

உகாண்டா நாட்டில் உள்ள முகோனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெண் மரியம் நபடான்ஸி.  இவர் தான் உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி  என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இந்தப் பெண் தனது  வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழித்திருக்கிறார்.  40 வயதான இவருக்கு 44 குழந்தைகள் உள்ளன. இந்தக் குழந்தைகளில்  6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று மொத்தம்அ 44 குழந்தைகளை பெற்றெடுத்திருகிறார். தற்போது அதில்  38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். 

மரியம் நபடான்ஸி தனது சின்னம்மாவின்  பராமரிப்பில் வந்துள்ளார். மரியம்முக்கு 12 வயது இருக்கும் போது 28 வயது நபருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர், தினமும் கணவர் இவரை அடித்து உதைத்துள்ளார்.தினமும் குடித்துவிட்டு ரகளை. நரக வாழ்க்கை. விருப்பம் இல்லாவிட்டாலும் மறுக்க முடியாது, குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும் என்ற நிலை.வீட்டில் இருக்கும் பலவேலைகளை செய்வது மட்டுமல்லாமல், வெளியில் சென்றும் வேலை செய்தாக இவர் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலும் நான் கர்ப்பத்தோடுதான் இருப்பேன். ஆனாலும் குழந்தைகள் மூலமே கொஞ்சம் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான பற்றும் எனக்கு ஏற்பட்டது என்கிறார் மரியம்.எனது கணவருக்கு நான் மட்டும் மனைவி அல்ல. பல மனைவிகள் உள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை இரவில்தான் இங்கே வருவார். குடும்பம் நடத்துவார். அதிகாலை குழந்தைகள் கண் விழிப்பதற்குள் கிளம்பிவிடுவார். என் மூத்த மகனே 13 வயதில்தான் அவன் அப்பாவைப் பார்த்தான். என்னுடைய பல குழந்தைகள் அவரை இதுவரை பார்த்ததில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்..

1994-ம் ஆண்டு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதற்குப் பிறகு 2, 3, 4 என்று குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தன.  தனக்கு  மரபணு பிரச்சினை இருப்பதாகவும். அதிகமான சினை முட்டைகள் உருவாவதால் அதிக குழந்தைகள் பிறப்பதாகவும் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 பார் சோப் தனது  குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது என்றும், பணக்கஷ்டம் இருந்தாலும் அன்றாடம் வேலைக்கு சென்று எனது பிள்ளைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். இதுவரை பட்டினி போட்டது  கிடையாது என்றும் மரியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios