காசு தர்ரோம்னு நாங்க எப்போ சொன்னோம்? கைவிரித்த அரபு நாடு அமீரகம்...
கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700கோடி வழங்குவதாக வெளியான செய்திக்கு அந்நாட்டு தூதுவர் அகமது அல்பன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700கோடி வழங்குவதாக வெளியான செய்திக்கு அந்நாட்டு தூதுவர் அகமது அல்பன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. தென்மேற்கு பருவ மழையின் உக்கிர தாண்டவம் காரணமாக கடந்த இரு வாரங்களாக கேரளாவில் கொட்டி தீர்த்துள்ள கன மழையால் கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடுகளாகியுள்ளன.
14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. பல மாவட்டங்கள் கடும் உயிர்சேதங்களையும் பொருட் சேதங்களையும் சந்தித்துள்ளன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.
மத்திய அரசு கேரளா வெள்ளத்துக்கு 600 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இந்த நிதி போதாது என கேரள அரசு கூறிவந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிற்கு 700கோடி நிதி வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியானது இந்நிலையில் அச்செய்தியை ஐக்கிய அரபு அமீரகம் தற்போது மறுத்துளளது. . மேலும் மத்திய அரசு அந்நிதியை வாங்க மறுத்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.