BRICS : பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர 2 நாடுகள் விண்ணப்பம்.. சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான்.!
BRICS : பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ்-ன் 14வது ஆண்டு கூட்டம் சீனா தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு
இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரிக்ஸ் கூட்டமைப்பின் மீது பல்வேறு சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளது. பிரிக்ஸ் குழுவில் எங்களை பங்கேற்க விடாமல் பிரிக்ஸ் குழுவின் ஒரு உறுப்பினர் தடுத்து உள்ளார்கள் என்று இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம், ‘பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் 14-வது உச்சிமாநாட்டில், உலக வளர்ச்சி குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வளரும் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார நாடுகள் பங்கேற்க அழைக்கப்பட்டன.
பிரிக்ஸ் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாதவா்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பது தொடா்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என சீனா தொிவித்தது. ஆனால் வருந்தத்தக்க வகையில் இதில் பாகிஸ்தான் பங்கேற்பதை ஒரு உறுப்பினா் தடுத்து உள்ளது’ என சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !
ஈரான், அர்ஜென்டினா
இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர 2 புதிய நாடுகள் விண்ணப்பித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் குழுவில் சேர ஈரான் மற்றும் அர்ஜென்டினா விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஐரோப்பாவில் இருக்கும் அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், அர்ஜென்டினா பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கான தனது விருப்பத்தை அடிக்கடி தெரிவித்து வருகிறார்.
‘உலகில் வேறு எதை முடக்குவது, தடை செய்வது அல்லது கெடுப்பது என்று வெள்ளை மாளிகை யோசித்துக்கொண்டிருந்தபோது, அர்ஜென்டினாவும் ஈரானும் பிரிக்ஸ் அமைப்பில் சேர விண்ணப்பித்தன’ ரஷ்யாவை வெளியுறவுத்துறையை சேர்ந்த ஜகரோவா டெலிகிராமில் கூறியுள்ளார். ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க ரஷ்யா நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது, ஆனால் உக்ரைன் மீதான அதன் படையெடுப்பு தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சீர்செய்வதற்கான அதன் முயற்சிகளை அது சமீபத்தில் தீவிரப்படுத்தியுள்ளது
இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு