ஜூன் 15ஆம் தேதி என்ன நடக்கும்? பூமியை நெருங்கும் இரண்டு விண்கற்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
488453 (1994 XD) மற்றும் 2020 DB5 என்று பெயரிடப்பட்ட இரண்டு பெரிய விண்கற்கள் விரைவில் பூமியை நெருங்கி வருகின்றன என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெரிய விண்கற்கள் சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப்பாதையில் முன்னோக்கி நகரும்போது பூமிக்கு அருகில் வருகின்றன. அவை இரண்டும் 500 முதல் 850 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சூரியனைச் சுற்றி வரும் சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்கள் மற்றும் விண்கற்கள் பல நூறு கிலோமீட்டர் விட்டம் கொண்டவையாக இருக்கும். இந்நிலையில், 488453 (1994 XD) மற்றும் 2020 DB5 என அழைக்கப்படும் இரண்டு விண்கற்களும் பூமிக்கு அருகில் வருகின்றன.
ஐபோன் வாங்க இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது! பிளிப்கார்டில் இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்!
488453 (1994 XD) ஜூன் 12 அன்று பூமிக்கு அருகில் வரும், 2020 DB5 ஜூன் 15 அன்று பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டின் விட்டமும் 150 மீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் அபாயகரமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
488453 (1994 XD) என்ற விண்கல் திங்கட்கிழமை பூமியை நெருங்கும்போது பூமிக்கு 31,62,498 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 77,292 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும். இது கடைசியாக நவம்பர் 27, 2012 அன்று பூமியை அருகில் சந்தித்துச் சென்றது. மீண்டும ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2030 இல் பூமிக்குத் திரும்பும்.
அதிரடியாக விலை குறைந்த Samsung Galaxy S22! இவ்வளவுதானா.! சூப்பர் டீலை மிஸ் பண்ணிடாதீங்க !!
2020 DB5 என்ற விண்கல் ஜூன் 15 அன்று பூமிக்கு அருகில் வரும். கிட்டத்தட்ட 43,08,418 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 34,272 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும். இது கடைசியாக 1995 இல் பூமிக்கு அருகில் வந்தது. ஜூன் 15ஆம் தேதி நெருங்கிய பிறகு, 2048 வரை வேறு எந்த விண்கல்லும் பூமியை நெருங்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
விண்கற்களின் சுற்றுப்பாதை தீர்மானிக்கப்பட்டவுடன், விஞ்ஞானிகள் அதிநவீன கணித மாதிரிகள் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீடுகளைப் பயன்படுத்தி அதன் எதிர்காலப் பாதையை கணிக்கின்றனர். அதில், அவை பூமியை நெருங்குவதற்கான வாய்ப்பு மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றைக் அனுமானிக்கின்றனர்.
கூகுள் டிரைவ் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதா? ஈசியாக ஸ்பேஸ் உருவாக்கும் வழிகள் இதோ!