லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... 22 அகதிகள் உயிரிழப்பு!
துருக்கியில் அகதிகளுடன் சென்ற வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துருக்கியில் அகதிகளுடன் சென்ற வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, ஆப்ரிக்கா மக்கள் துருக்கியிலிருந்து கடல் வழியாக கிரீஸ் நாட்டுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் ரப்பர் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய சட்டவிரோதமாக சிலர் துருக்கியின் இஸ்மிர் விமான நிலையம் அருகே நேற்று லாரியில் சென்று கொண்டிருந்தனர். இஸ்மிர் கடல் பகுதியிலிருந்து கிரீசுக்கு படகில் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். லாரி சென்றுக்கொண்டிருந்த திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு கம்பிகளை உடைத்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.