துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். துனிசியா கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றபோது படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். படகு கவிழ்ந்ததை பார்த்த மீனவர்கள் சிலர் 4 பேரை மீட்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். கடந்த மே மாதம் ஏற்பட்ட படகு விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.