ஸ்ரீகைலாசத்தையாட அசைக்க முயற்சி செய்வீங்க..? ஏண்டா..? இலங்கைக்கும் குறி வைத்த நித்யானந்தா..!

கைலாசாத்தை அசைக்க முடியுமாடா..? ஏண்டா..? ஸ்ரீகைலாசத்தை அசைக்க முடியாதுடா என நித்யானந்தா சவால் விடுத்துள்ளார்.
 

Trying to shake off Srilakalasattaya ..? Enta ..? Nithyananda's goal for Sri Lanka ..!

தலைமறைவாக உள்ள நித்யானந்தா அவ்வப்போது வீடியோக்களில் தோன்றி குபீர் குண்டுகளை வீசிவருகிறார். அவர் கைலாசா நாடு உருவாக்கியதை இப்போதும் மறுக்கவில்லை. 

Trying to shake off Srilakalasattaya ..? Enta ..? Nithyananda's goal for Sri Lanka ..!

தனிநாடு எங்கே அமைக்கப்போகிறீர்கள் என்று கேள்வி எழுந்த நிலையில், சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள் கைலாசா உருவாகும் என்று காமெடியாக பேசி, தனிநாடு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால், தனது அடுத்த டார்கெட் ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்யானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Trying to shake off Srilakalasattaya ..? Enta ..? Nithyananda's goal for Sri Lanka ..!

தனது சத்சங்கத்தின் போது, ராவணனை திட்டித்தீர்த்த நித்யானந்தா, ராவணன் ஒரு முட்டாள். ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டுத் தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள்பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக் கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்துச் சென்று ஸ்ரீலங்காவில் வைத்தான்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நித்யானந்தா அனுப்பிய கடிதத்தில், தன்னையும் தனது சீடர்களையும் அழித்தொழிக்கும் வேலையில் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இப்போது அப்படியே பல்டி அடித்துள்ளார்.

நான் அரசியல் பற்றி பேசவரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் பொருளாதார ரீதியில் இந்தியா செழிக்கும், ஏனெனில் சமூகத்திற்கு பங்களிப்பதுதான் ராமரின் கொள்கை. இந்திய மனங்களில் அந்த ராமரின் கொள்கைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தால் ராமபக்தி மீண்டும் வந்தால் உலகிற்கு பங்களிக்கும் அளவுக்கு இந்தியா செழித்து விடும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களித்ததாகும்.Trying to shake off Srilakalasattaya ..? Enta ..? Nithyananda's goal for Sri Lanka ..!

நான் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனாலும், எனது சந்நியாசிகளும் சீடர்களும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்கும்படி நான் வலியுறுத்துகிறேன். நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவதில்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள். எனக்குத் தெரியும். அதனால் ராமர் கோவில் கட்ட முறையான வழியில் நான் பங்களிப்பேன்’’எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைலாசாத்தை அசைக்க முடியுமாடா..? ஏண்டா..? ஸ்ரீகைலாசத்தை அசைக்க முடியாதுடா என நித்யானந்தா சவால் விடுத்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios