அமெரிக்‍க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகுந்த விமர்சனத்துக்‍கு ஆளானார். ஹிலாரி உள்ளிட்ட ஜனநாயகக்‍ கட்சி தலைவர்கள் பல முனைகளில் டொனால்ட் மீது குற்றச்சாட்டுகளை எய்தனர்.

அதில் முக்‍கியமானது பாலியல் தொடர்பான பிரச்சனை. முன்னாள் நடிகைகள், விளம்பர மாடல்கள் என பல தரப்பட்ட பெண்கள், ட்ரம்ப் ஒரு காதல் மன்னன் என்றும், அவரால் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிக்‍கப்பட்டோம் என்றும் குற்றம் சுமத்தினர்.

ஆனால் ட்ரம்ப் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்‍கொள்ளாமல், தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தனக்‍கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்ததோடு மட்டுமல்லாமல், ஹிலாரி மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தி, தன் மீதான புகாரை வலுவிழக்‍கச் செய்தார்.

அதேநேரத்தில் ட்ரம்ப் ஒரு காதல் மன்னன் என்பது உண்மையே!. இதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்‍கை ஒரு உதாரணமாக சொல்லலாம். 1977-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் இவானா ஸெல்நிக்‍கோவா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்‍கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால் 15 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்த இவர்களது திருமண வாழ்க்‍கை கசந்தது. இதனையடுத்து, அவர்கள் 1992-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்‍கொண்டனர். விவாகரத்தான அடுத்த ஆண்டே மார்லா மேப்பல்ஸ் என்பரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணமும் 1999-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. 

இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்த டொனால்ட் ட்ரம்ப், இடையிடையே பல்வேறு காதல் விவகாரங்களிலும் சிக்‍கினார். இதன் உச்சம்தான் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த மெலானியாவின் காதல். தன்னைவிட 24 வயது இளையவரான மெலானியாவை தனது காதல் வலையில் வீழ்த்த ட்ரம்ப் ஏராளமான முயற்சிகளை செய்தது அமெரிக்‍காவில் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

மெலானியாவிடம் தமது காதலை சொன்னபோது, அவர் உடனடியாக ஏற்றுக்‍கொள்ளவில்லை என்றாலும், ட்ரம்பின் நடவடிக்‍கைகள், சுறுசுறுப்பு, வியாபாரத் தந்திரம் போன்றவற்றால் கவரப்பட்ட மெலானியா, ட்ரம்ப்பின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்‍கொண்டார்.

இதனையடுத்து 2005-ம் ஆண்டு ட்ரம்ப் - மெலானியா திருமணம் நடைபெற்றது.

மெலானியாவைத் திருமணம் செய்த பின்னர், ட்ரம்பின் வாழ்க்‍கைத் தரம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது. தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ட்ரம்ப், படிப்படியாக முன்னேற்றத்தைக்‍ கண்டார்.

அதன் பின்னர்தான் அவரது அரசியல் வாழ்க்‍கை தொடங்கியது. ட்ரம்ப் அரசியலில் காலடி எடுத்து வைக்‍க மெலானியா ஒரு முக்‍கிய காரணமாக இருந்துள்ளார்.