Asianet News TamilAsianet News Tamil

டிரம்புக்‍கு அதிபர் மாளிகை எச்சரிக்‍கை!

trump white-house
Author
First Published Nov 29, 2016, 5:15 PM IST


கியூபாவுடனான தற்போதைய வெளியுறவுக்‍ கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவேண்டாம் என அமெரிக்‍க அதிபராக பதவியேற்கவிருக்‍கும் Donald Trump-க்‍கு அதிபர் மாளிகை நிர்வாகம் எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

அமெரிக்‍க அதிபர் ஒபாமா மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக அமெரிக்‍காவுக்‍கும் கியூபாவுக்‍கும் இடையே அரைநூற்றாண்டுகளாக நிலவிவந்த பகைமைப் போக்‍கு மாறி, நட்புறவு மலர்ந்தது.

இருநாடுகளுக்‍கும் இடையே வர்த்தகம், சுற்றுலா என பல்வேறு துறைகளும் வளர்ந்து வருகின்றன. கியூபாவை வலிமைவாய்ந்த நாடாக உருவாக்‍கியவரும் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ, சிலதினங்களுக்‍கு முன் காலமானார்.

trump white-house

இந்த சூழ்நிலையில் அமெரிக்‍க அதிபர் பதவிக்‍கு தேர்வாகியுள்ள Donald Trump, தனது ட்விட்டர் இணையதளத்தில்,  கியூபா அரசு, தனது மக்‍களையும், கியூப-அமெரிக்‍கர்கள் மற்றும் அமெரிக்‍காவையும் சமமமாக நடத்தவில்லை என்றால், கியூபாவுடனான தற்போதுள்ள கொள்கை முடிவுக்‍கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் கியூபாவுடன் தற்போது இணக்‍கமான நட்புறவு நிலவுவதற்கு காரணமாக வெளியுறவுக்‍ கொள்கையை மாற்ற முற்பட்டால், அது, அமெரிக்‍காவுக்‍கு தூதரக ரீதியாக மட்டும் இன்றி, பொளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றிலும் இழப்புக்‍கு வழிவகுத்துவிடும் என்றும் அமெரிக்‍க அதிபர் மாளிகை நிர்வாகம், Donald Trump-க்‍கு எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

அத்துடன் face book இணையதள பக்‍கத்தில், மறைந்த முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை சர்வாதிகாரி என Donald Trump பதிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள், Trump-ன் ஆட்சேபகரமான பதிவுக்‍கு  எதிர்ப்பு தெரிவித்து,  தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios