அமெரிக்க அதிபர் தேர்தல்; வெற்றிக்கு வாழ்த்திய மோடியை, உற்ற நண்பர் என்று புகழ்ந்து நன்றி கூறிய டிரம்ப்!
Trump Thanked Modi : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல் டிரம்பிறகு அலைபேசி மூலம் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார் பிரதமர் மோடி.
நடந்து முடிந்த அமெரிக்காவிற்கான அதிபர் தேர்தலில், பல லட்சம் வாக்குகள் முன்னிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, கமலா ஹாரிஸை தோற்கடித்து இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக மாறி இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபராக அவர் பதவி ஏற்க உள்ளது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் 47வது அதிபராக விரைவில் பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கு, பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி முதலில் தனது ட்விட்டர் வாயிலாக டிரம்ப்பிற்கு வாழ்த்துக்களை கூறினார். மேலும் இன்று மாலை அலைபேசி மூலம் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு, தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் மோடி.
PM Modi Wishes Donald Trump: டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
குடியரசு கட்சியின் சார்பாக இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ள தனது நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக மோடி கூறியிருக்கிறார். இரண்டு நாட்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்து உலகத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பதாக இந்த அலைபேசி உரையாடலில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்த உலகமே அன்போடு கொண்டாடும் ஒரு தலைவராக பிரதமர் மோடி மாறியிருப்பதாக தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு அற்புதமான நாடு, அதை அழகாக ஆட்சி செய்து வரும் மோடியும் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்று புகழாரம் சுற்றியுள்ளார் டொனால்ட் டிரம்ப். மேலும் மோடி மற்றும் இந்தியா, அமெரிக்காவின் சிறந்த நண்பர்கள் என்றும், தன்னுடைய அதிபர் தேர்தலின் வெற்றிக்கு பிறகு தான் உரையாடிய மிகச்சிறந்த மனிதர்களில் மோடியும் ஒருவர் என்று டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
90ஸ் கிட்ஸ்க்கு ரொம்ப பிடித்த WWF; அதுக்கும் அதிபர் டிரம்புக்கும் ஒரு பாண்டிங் இருக்கு தெரியுமா?