அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை 'மிகவும் புத்திசாலி' என்றும் புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை 'மிகவும் புத்திசாலி' என்றும் 'எனது நல்ல நண்பர்' என்றும் புகழ்ந்துள்ளார்.

நியூ ஜெர்சிக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் பதவியேற்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியின் தலைமைப் பண்புகளைப் பாராட்டிப் பேசினார். மோடி சிறந்த பிரதமர் எனவும் குறிப்பிட்டார்.

அதிக வரி விதிக்கும் நாடு:

டிரம்ப் கூறுகையில், "பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம்," என்றார். "இந்தியா உலகின் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று... அவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர் (பிரதமர் மோடி) ஒரு புத்திசாலி. எனக்கு ஒரு சிறந்த நண்பர்" என்று டிரம்ப் கூறினார்.

"நாங்கள் நல்ல பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் எல்லாம் நன்றாக நடக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு (இந்தியாவுக்கு) ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று சொல்ல விரும்புகிறேன்" எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

மியான்மரில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஏன்?

Scroll to load tweet…

டிரம்ப்பைப் புகழ்ந்த மோடி:

கடந்த மார்ச் 16 அன்று, டிரம்ப்பை மோடி பாராட்டினார். 2019-ல் ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்வில் டிரம்ப்பின் பேச்சை மோடி நினைவுகூர்ந்தார்.

"நாங்கள் ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை நடத்தினோம். டிரம்ப் மற்றும் நான் இருவரும் அங்கு இருந்தோம். அந்த மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. அமெரிக்காவில் ஒரு பெரிய கூட்டத்தில் கலந்துகொள்வது ஒரு பெரிய தருணம். விளையாட்டுப் போட்டிகளில் நிரம்பிய மைதானங்கள் சாதாரணமாக இருந்தாலும், ஒரு அரசியல் கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் வருவது அசாதாரணமானது... அன்று நாங்கள் இருவரும் உரை நிகழ்த்தினோம், அவர் கீழே உட்கார்ந்து நான் பேசுவதைக் கேட்டார். அதுதான் அவருடைய பணிவு. அமெரிக்க அதிபர் பார்வையாளர்களில் ஒருவராக இருக்க, நான் மேடையில் இருந்து பேசினேன்" என்று லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான ஒரு போட்காஸ்டில் பிரதமர் மோடி கூறினார்.

இறக்குமதி வரி உயர்வு:

மோடி பிப்ரவரியில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து டிரம்ப் அவரைப் பாராட்டியிருக்கிறார். இரு தலைவர்களும் 2025 வசந்த காலத்திற்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (BTA) நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

வியாழக்கிழமை, டிரம்ப் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார். ஏப்ரல் 2 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றார். இந்த வரி விதிப்பு அமெரிக்காவில் விற்கப்படும் கிட்டத்தட்ட பாதி வாகனங்களைப் பஆதிக்கும். அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் அமெரிக்க எல்லைக்குள் அதிக உற்பத்தி வசதிகளை நிறுவ ஊக்குவிக்கும்.

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு, 1,670 பேர் காயம்