பாகிஸ்தானை நம்புகிறேன்... இம்ரான் கானிடம் வாக்குக் கொடுத்த ட்ரம்ப்..!

இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரே நாளில் மாறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

trump in meet with imran khan says want to see everyone treated well in kashmir

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில்  பிரதமர் மோடியுடன் நேற்று முன்தினம் ஒரே மேடையில் உரையாற்றிய டிரம்ப், "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து உலகத்தை விடுவிக்க அமெரிக்க துணை நிற்கும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த அவர் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ட்ராக் மாறியுள்ளார். trump in meet with imran khan says want to see everyone treated well in kashmir

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.trump in meet with imran khan says want to see everyone treated well in kashmir
 

இதனையடுத்து பேசிய ‘நான் இம்ரான் மற்றும் மோடிக்கு நல்ல நண்பனாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடியும். காஷ்மீரில் எல்லாம் சரியாக நடப்பதை நான் காண விரும்புகிறேன். அங்கு அனைவரும் சரியாக நடத்தப்பட வேண்டும் என்னால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளேன்’ என தடாலடியாக மாற்றிப்பேசி உள்ளார் ட்ரம்ப்.

முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த இந்தியாவும், அதிபர் ட்ரம்புடன் நன்கு தொடர்பு கொண்டுவிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளதால், அவர் வேட்பாளராக மீண்டும் நிற்கிறார். எனவே, அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

trump in meet with imran khan says want to see everyone treated well in kashmir

அமெரிக்காவில் 9/11 தாக்குதல், மும்பையில் 26/11 தாக்குதல் நடத்தியவர்களை தற்போது எங்கே தேடுவது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். இப்படி ட்ரம்ப் மாறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாறியுள்ளது விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios