ட்ரம்ப்- மனைவி மெலானியா இருவருக்கும் கொரோனா... அதிர்ச்சியில் அமெரிக்கா..!
இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், சிகிச்சைகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கும், தனது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அதிபர் ட்ரம்ப்பின் முறையற்ற நடவடிக்கைகளே காரணம் என எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேநேரத்தில் மற்ற நாடுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்து வருகிறார். முகக்கவசம் அணிவதால் எந்தப் பலனும் இல்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், சிகிச்சைகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் சேர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.