தினுசு தினுசாக அறிவுரை, மாறி மாறி கலாய் என சாமியார் உடையில் வலம் வந்து கொண்டிருக்கும் சத்ஸங்க வாழ்க்கை உச்சத்தை தொட்டுள்ளது.  ஸ்ரீ கைலாஸா என்ற பெயரில் நித்யானந்தாவின் தனி நாடு முன்னெடுப்பு பாடிதொட்டி எங்கும் பிரபலமானாலும், அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார்? நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சிஷ்யைகளுடன்  ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது உண்மையா? என அடுக்கடுக்காய் கேள்விகள் எழுகின்றன. 

அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது,  தென் அமெரிக்கா நாடுகளை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. பல லட்சம் ரூபாய் வாடகைக்கு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள நித்தி கும்பல் அதில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஈகுவடார் நாட்டில் இருந்து துரத்தப்பட்டதாக கூறப்படும் நித்தியானந்த கும்பல் தற்போது சொகுசுக்கப்பலில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. 

விமானத்தில் பயணித்தால் பாஸ்போர்ட் தேவைப்படும். ஆனால் சொகுசு கப்பலில் எந்த நாட்டின் எல்லையிலும் எத்த்னை நாட்கள் வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாம். இந்தப் பாயிண்டை பிடித்துக் கொண்ட நித்தி கும்பல் உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளில் அகதி குடியுரிமை கோரி அலைந்து வருகிறது. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதாக இந்திய அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்து விட்டதால், எந்த நாடும் நித்திக்கு புகலிடம் தர மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் அதிருப்தி அடைந்த நித்யானந்தா தான் யாருக்கும் எதிரி இல்லை. இந்தியா தான் தனக்கு உயிர் என்றும் கூறி வருகிறார். எங்கு சென்றாலும் எதிர்ப்பு எழுவதால் இந்தியாவிடம் சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.  சிஷ்யையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, இன்னொரு சிஷ்யையை மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் சில நாட்களில் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.