எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் பலி எண்ணிக்கை  43 ஆக உயர்ந்துள்ளது.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்த ஒரு ரயிலும், கோர்சித் பகுதியில்  இருந்து ஒரு ரயிலும் போர்ட் செய்ட் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த கோர விபத்தில் 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.  ஆனால் தற்போதையை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.இதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிக்னல் மாற்றி போடப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து இது தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு கிஸாவில் நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.