விண்வெளியில் விளைந்த தக்காளி பூமிக்கு வருகிறது! 3 முறை அறுவடை செய்து அசத்திய நாசா!
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்த்த தக்காளி ஸ்பேஸ் எக்ஸ் சரக்கு விண்கலம் மூலம் இன்று பூமிக்குத் திரும்பி வருவதாக நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விளைந்த தக்காளி இன்று (ஏப்ரல் 15) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சி.ஆர்.எஸ். 27 (CRS-27) என்ற சரக்கு விநியோக விண்கலத்தில் பூமிக்கு திரும்புவதாக என்று நாசா அறிவித்துள்ளது. CRS-7 ISS விண்கலம் இந்திய நேரப்படி இரவு 8:15 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புறப்படும்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தின் மினியேச்சர் கிரீன்ஹவுஸில் தக்காளி பயிரிட்டு வளர்த்தனர். இந்த தக்காளிகள் 90, 97 மற்றும் 104 நாட்களில் மூன்று அறுவடைகளைக் கண்டுள்ளன. பின்னர் அந்தத் தக்காளிகள் ஊட்டச்சத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் குண்டு வீச்சு; நூலிழையில் உயிர் தப்பினார்!
புதிய உணவுக்காக விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் திறன் மற்றும் மேம்பட்ட குழு வாழ்க்கை அனுபவம் ஆகியவை எதிர்காலத்தில் நீண்ட கால பணிகளுக்கு முக்கியமானது என நாசா தெரிவித்துள்ளது. இதே முறையை பூமியில் பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்த சோதனை மாற்றியமைக்கப்படலாம் என்றும் நாசா கூறுகிறது.
விண்வெளியில் விளைந்த தக்காளியுடன் வரும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சி.ஆர்.எஸ். 27 (CRS-27) விண்கலம் கிட்டத்தட்ட 2,000 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மைக்ரோ கிராவிட்டியில் தமனிகள் வயதாகும் விதம் குறித்து கனேடிய விண்வெளி ஏஜென்சி நடத்திய ஆய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளும் இந்த் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புகின்றன.
28 ரயில்களில் 583 பெர்த் அதிகரிப்பு! திடீர் மாற்றத்தால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி
இதேபோல ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (JAXA) தயாரித்த படிகங்களும் பூமிக்கு வருகின்றன. ஜப்பானின் படிக வளர்ச்சி முறை குறைத்த ஆய்வு திறன்மிக்க சூரிய மின்கலங்களை உருவாக்குதல் மற்றும் குறைக்கடத்தி அடிப்படையிலான மின்னணுவியல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு பயன்படக்கூடும்.
விண்வெளியில் வளர்வதற்கு ஏற்ற வகையில் தக்காளியில் மரபணு மாற்றம் செய்துள்ளனர். இந்தத் தக்காளிச் செடிகள் சிறிய இலைகள் மற்றும் தண்டுகளைக் கொண்டவையாக இருக்கும். குறைந்த இடவசதி உள்ள விவசாயிகள் பயிரிடுவதற்கு ஏற்றதாகவும் அதிக உற்பத்தி செய்யும் வகையிலும் இருக்கும். குறிப்பாக, மரபணு மாற்றம் செய்யப்பட்டபோதும் இந்தத் தக்காளிச் செடிகள் ஆர்கானிக் செடிகளாகவே இருக்கும் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
மேட்ரிமோனி தளத்தில் ஐபோன் விற்பனை! பெண்ணிடம் நேக்காக 3 லட்சத்தைச் சுருட்டிய இளைஞர்