Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானின் ஆவேச முடிவால் அதிர்ச்சி... சோத்துக்கே லாட்டரி அடிக்க வேண்டிய பரிதாப நிலை..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370 வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் ஆவேசமடைந்து பல முடிவுகளில் கோட்டை விட்டு அதன் பாதிப்பை அனுபவிக்க தொடங்கி இருகிறது. 
 

tomato price shoots up to rs 300 per kg in pakistan
Author
Pakistan, First Published Aug 10, 2019, 5:19 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370 வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் ஆவேசமடைந்து பல முடிவுகளில் கோட்டை விட்டு அதன் பாதிப்பை அனுபவிக்க தொடங்கி இருகிறது. tomato price shoots up to rs 300 per kg in pakistan

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் அந்தக் கோபத்தில், பாகிஸ்தான் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டது. ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும் வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டனர். இந்திய அரசாங்கம் சுங்க வரியை 200 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயை எட்டியுள்ளது.tomato price shoots up to rs 300 per kg in pakistan

அசோசியேட் வலைத்தளமான ஜீபிஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானுக்கு அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் டெல்லி ஆசாத்பூர் மண்டியில் உள்ள வர்த்தகர்கள், பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். 

தக்காளி வர்த்தக சங்கத் தலைவர் அசோக் கோசிக் கூறுகையில், இங்குள்ள அட்டாரி-பாகா எல்லையில் இருந்து தினமும் 75 முதல் 100 லாரிகள் தக்காளி சென்று கொண்டிருந்தன. ஆனால் தற்போது அதை நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல பிற காய்கறிகள், பழங்கள், பருத்தி மற்றும் நூல் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களும் பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்பதை நிறுத்தி உள்ளனர். 

இந்தியாவுடான வணிக உறவை முறித்துக்கொண்ட பாகிஸ்தானுக்கு தக்காளியின் விலை மட்டுமல்ல, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் அங்கு உயர்ந்துள்ளன. அதாவது பெரும்பாலான அனைத்து காய்கறிகளின் விலை இரட்டிப்பாகியுள்ளது. பாகிஸ்தானின் காய்கறி சந்தையிலும் உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.tomato price shoots up to rs 300 per kg in pakistan

முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா தடை செய்திருந்தது. அந்த நேரத்தில், தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலைகள் கடும் வேகமாக உயர்ந்தன. சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ஐ நீக்கிய பின்னர், பாக்கிஸ்தான் இதுபோன்ற பல முடிவுகளை ஆவேசமாக எடுத்துள்ளது, இதன் காரணமாக நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios