சிரிய விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத்தொட்டியில் வீசி விட்டதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  இது அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்துவருகின்றன.  

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக குர்து படைகளுடன் இணைந்து, அமெரிக்கா செயல்பட்டு வந்தது. பயங்கரவாதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் தனது ராணுவத் துருப்புகளை அமெரிக்க திரும்ப பெற்றது.  அதுமுதல் பழிவாங்கும் நடவடிக்கையாக வடக்கு சிரியா பகுதிகளில் வாழும் குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதை கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி கடுமையாக எச்சரித்ததுடன்,  அவசியம் ஏற்பட்டால்  மீண்டும் குர்துகளுக்காக அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்பி வைக்கும் என எச்சரித்தார். 

குர்துக்களின் மீதான தாக்குதலை துருக்கி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்ததுடன், தாக்குதல் தொடர்ந்தால் துர்கியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என மிரட்டியிருந்தார்.  இந்நிலையில் துருக்கி அதிபர்   ஏர்டகனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் துருக்கி இனி முட்டாள்தனமாக செயல்படாமல் ஒரு நல்ல உடன்பாடிக்கைக்கு முன்வர வேண்டும் என்றும், துருக்கியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்க வேண்டாம் என்றும், துருக்கியின் பொருளாதாரம் அழிவதற்கு தானும் காரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த கடிதம் வெள்ளை மாளிகையில் இருந்த துருக்கி அதிபருக்கு  அனுப்பப்பட்ட  நிலையில் அந்த கடிதத்தை பெற்ற துருக்கி அதிபர் அதைத்தான் அலுவலக குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதற்கான தகவலை அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது துருக்கி அதிபரின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை வம்பிழுக்கும் செயல் என அமெரிக்க ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.