அமெரிக்காவில் மூன்று இந்தியர்களுக்கு நீதிபதி பதவி

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் அந்நாட்டு கவுன்டி நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுள்ளனர்.

Three Indian-Americans take oath as county judges in US

அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் பெண்ட் கவுண்டி நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேரந்த ஜூலி மேத்யூ, கே.பி. ஜார்ஜ், சுரேந்திரன் படேல் ஆகியோர் நீதிபதிகளாகப் பதவியேற்றுள்ளனர். மூவரும் இந்தியாவில் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நீதிபதிகளுடன் இவர்களும் பதவியேற்றனர். இவர்களில் ஜூலை மேத்யூ ஏற்கெனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நீதிபதியாகத் தேர்வானவர். இப்போது அவர் மீண்டும் நீதிபதி பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.

இந்தியாவில் கேரள மாநிலம் திருவல்லத்தைச் சேர்ந்த இவர்தான் அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி பதவியைப் பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் செட்டிலாகும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?

இதேபோல 57 வயதாகும் கே.பி. ஜார்ஜ்  சென்ற 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் முறையாக இந்திய வம்சாவளி நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இவரும் கேரளாவின் காக்கோட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

52 வயதாகும் சுரேந்திரன் படேல் 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். கல்கத்தாவில் சட்டம் படித்தவர். 2015ஆம் ஆண்டு முதல் ஹூஸ்டன் நகர மலையாளிகள் கூட்டமைப்பின் தலைவராக இருந்துவருகிறார். இந்த அமைப்பு 12 ஆயிரம் இந்தியக் குடும்பங்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் சிலிண்டருக்கு பதில் பலூனில் சமையல் எரிவாயு விற்பனை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios