சொந்த வீடு வாங்க வெறும் 84 ரூபாய் இருந்தா போதும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு!

பால்டிமோர் நகரில், 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன, அவற்றில் 1,000 வீடுகள் நகரத்திற்குச் சொந்தமானவை. தனிநபர்களும் அறக்கட்டளைகளும் நகரத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒரு டாலருக்கு வாங்கலாம்.

This US City To Sell Vacant Homes For Just $1 Each sgb

உலகம் முழுவதும் சாமானிய மக்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க எவ்வளவோ போராடி வருகிறார்கள். ஆனால் அமெரிக்க நகரமான பால்டிமோரில் காலியான வீடுகளை வெறும் ஒரு டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.84) விற்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. 1970 களில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பால்டிமோர் நகரில், 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன. அவற்றில் 1,000 வீடுகள் பால்டிமோர் நகரத்திற்குச் சொந்தமானவை. இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளைகள் நகரத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒரு டாலர் விலை கொடுத்து வாங்கலாம்.

ஒரு டாலருக்கு காலியாக உள்ள வீட்டை வாங்குபவர்கள், அதற்குப் பின் தங்கள் சொந்தச் செலவில் அந்த வீட்டைச் சரிசெய்து புதுப்பிக்க வேண்டும். மேயர் பிராண்டன் ஸ்காட் இந்த திட்டத்தை ஆதரித்து ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தில் 200 வீடுகள் அவற்றைப் பழுதுபார்த்து வசிக்க முன்வரும் மக்களுக்கு விற்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம், குடியிருப்பாளர்கள் காலியாக உள்ள வீடுகளை வாங்கி அவற்றை சரிசெய்வார்கள் என, நகரத்தார் நம்புகின்றனர். இருப்பினும், இந்தத் திட்டம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. சிறிய லாப நோக்கற்ற நிறுவனங்கள் 1,000 டாலருக்கு வீடுகளை வாங்கலாம். டெவலப்பர்கள் மற்றும் பெரிய லாப நோக்கமற்றவர்கள் இந்த வீடுகளில் ஒன்றை வாங்க 3,000 டாலர் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு இருந்தபோதிலும், நகர சபைத் தலைவர் நிக் மோஸ்பி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வீடுகளை பொதுமக்களுக்கு விற்க முன்னுரிமை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

"இது ஒரு மோசமான கொள்கை, ஏனெனில் இது சமூகத்தில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ இல்லை" என அவர் நிக் மோஸ்பி விமர்சித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios