தன்னிடம் பழகிய ஆண்கள் செய்யாததை தான் வளர்த்த நாய் செய்ததால் அதையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேரழியான மாடல் ஒருவர் கூறி அதிர வைத்துள்ளார். 

இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியை சேர்ந்த 49 வயது எலிசபெத் ஹோட். இவர் ஒரு பிரபல மாடல். இவருக்கு முன்பிருந்தே ஆண்கள் மீது அதிக வெறுப்பு இருந்து வந்துள்ளது. இந்த வெறுப்பால் அவர் ஆண்களை அவர் நம்பாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு காரணம் அவர் இதற்கு முன் 220-க்கும் அதிகமான ஆண்களிடம் நெருக்கமாக பழகி இருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் 6 ஆண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உறுதுணையாக இருந்தது இல்லை எனக் கூறுகிறார். அடுத்து இரண்டு முறை திருமணம் நிச்சயம் வரை சென்றும் இரண்டு முறையும் தடைபட்டது. 

20 ஆண்கள் திருமணம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். 1980ம் ஆண்டு புகழ்பெற்ற கோல்பஎ ஷேவே பல்லெஸ்ரோஸ் மற்றும் ஆகர்
சிறந்த கார் ரேஸ் வீரர் ஜேம்ஸ் ஹண்ட் ஆகியோரும் திருமணம் செய்ய முன் வந்துள்ளனர். ஆனாலும் அவர்களுடன் டேட்டிங் சென்று கழற்றி விட்டு விட்டார். 

இந்நிலையில், எலிசபெத் தான் வளர்த்து வரும் செல்லப்பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். தான் வருத்தமாக இருக்கும்போது எல்லாம் தனக்கு லோகன் தான் ஆறுதலாக இருப்பதாகவும், அதனால் லோகனையே வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் எலிசபெத் திருமணம் செய்த பின் நாயுடன் ஹனிமூன் செல்ல ஃப்ரண்ட்லி ஹோட்டலில் அறையையும் புக் செய்து விட்டார். 

இதை கேள்விபட்ட அவரது உறவினர்கள் பலர் எலிசெபத் தனது நாயை திருமணம் செய்யும் முடிவை மாற்றும்படி அறிவுரை சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இதனால் அவரது உறவினர்கள் எலிசெபத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக கூறி அவரை விட்டு விலகி சென்று விட்டனர். தன்னிடம் பழகிய ஆண்கள் செய்யாததை தான் வளர்த்த நாய் செய்வதால், நாயையே திருமணம் செய்ய பெண் ஒருவர் முடிவு செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.