Asianet News Tamil

தலையிலோ, முதுகிலோ சுடப்படும் ஆபத்து உள்ளது.. ரத்தவெறி பிடித்து கொக்கரிக்கும் மியான்மர் ராணுவம்.

அதே நேரத்தில் மியான்மர் நாட்டு ராணுவம் கைது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய பிரமுகர்களை கைது செய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் எங்குபார்த்தாலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.  

There is a risk of being shot in the head or back. The bloodthirsty Myanmar army.
Author
Chennai, First Published Mar 30, 2021, 12:20 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் மியான்மர் ராணுவத்திற்கு ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 510 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்தின்  இந்நடவடிக்கையை எதிர்த்து கிளர்ந்தெழுந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் கண்மூடித்தனமாக ஈடுபட்டுவருகிறது. இதுவரை அந்நாட்டில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 510 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  ராணுவத்தின் தொடர் அட்டூழியத்தை எதிர்த்து பொதுமக்கள் வீதிகளில் குவிந்து போராடி வருகின்றனர். நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

 

இந்நிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மியான்மர் நாட்டின் முந்தைய கொடூரமான மரணங்களில் இருந்து மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், தலையிலோ அல்லது முதுகிலோ சுடப்படும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என அந்நாட்டு ராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான யங்கூனில்  உள்ள அமெரிக்க வெளியுறவு துறைக்கு சொந்தமான கலாச்சார மையத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல நாட்டிலுள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த வன்முறைச் சம்பவங்களை கடுமையாக கண்டித்து வருகின்றனர். சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் பெண்கள் உட்பட 114 பேர் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 

பெருமளவில் யங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ராணுவ எதிர்ப்பை குறிக்கும் ஆயுதப்படை நாளில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன், மியான்மரில் நடக்கிற சம்பவம் பயமுறுத்துகிறது. இது முற்றிலும் கொடுமையானது, எனக்கு கிடைத்த தகவலின் படி ஏராளமான மக்கள் அனாவசியமாக கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் நடந்த ராணுவ சதித் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அப்பாவி மக்களுக்கு எதிராக ராணுவம் ஆயுதத்தை பிரயோகித்துள்ளது. பர்மிய ராணுவம் நாட்டின் தேசிய ஆயுதப்படை தினத்தில் ஒரு அபத்தமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நிலைபாட்டை எடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை கொன்றுள்ளது. ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின்னர் ராணுவம் இந்த ரத்தக்களரியில் ஈடுபட்டுள்ளது. என தனது எதிர்ப்பையும் ஆதங்கத்தினையும் பதிவு செய்துள்ளார். 

அதே நேரத்தில் மியான்மர் நாட்டு ராணுவம் கைது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய பிரமுகர்களை கைது செய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் எங்குபார்த்தாலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. சொந்த நாட்டு மக்கள் மீது மியான்மர் நாட்டு ராணுவம் வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. தென் கிழக்கில் உள்ள தென் மாகாணம் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. இதனால் அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் எல்லையை ஒட்டி உள்ள தாய்லாந்து நாட்டுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் நாட்டின் கொடூரத்தை கண்டித்து அமெரிக்க அந்நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். புதிய ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த தடை தொடரும் எனவும் அமெரிக்க வர்த்தக பிரிவு பிரதிநிதி கூறியுள்ளார்.  குறிப்பாக அந்நாட்டில் சுயாட்சி கோரி போராட்டம் நடத்தி வரும் கெயின் மாகாணத்தின் கரேன் இனத்தவர்களை குறி வைத்து ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அவ்வின மக்கள் காடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios