செலவழித்ததோ பல ஆயிரங்கள்... கிடைத்தது என்னவோ ஏமாற்றம்! இந்திய வம்சாவளி இளைஞரின் முயற்சிதான் என்ன?
அமெரிக்க அதிபர் ட்ம்ப் உடன் செல்பி எடுக்க முயன்ற இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதற்காக அவர் 38 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜங் சந்திப்பை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில், நேற்று சிங்கப்பூரில் அவர்களது சந்திப்பு நடந்தது. சென்டோசா தீவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 48 நிமிடங்கள் நடைபெற்றது. அணு ஆயுதங்களை கைவிடுவது, வடகொரியா மீதான த8டகளை நீக்குவது குறித்த பேச்சுகள் நடைபெற்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் செல்பி எடுக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 38 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான மகாராஜ் மோகன் (25), ட்ரம்ப்-ன் தீவிர ரசிகராம். இதனால், கிம் ஜங்கை சந்திப்பதற்காக ட்ரம்ப் சிங்கப்பூர் வருவதை அறிந்த மகாராஜ் மோகன், ட்ரம்புடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நினைத்து சிங்கப்பூர் வந்துள்ளார்.
இதற்காக செண்டோசா தீவில் உள்ள ஷாங்கரி லா விடுதியில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு மட்டும் 38 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடைபெற்ற பகுதியில் பல மணி நேரமாக,மோகன் சுற்றித் திரிந்துள்ளார். ஆனால், ட்ரம்ப்-ஐ நெருங்க முடியவில்லை.
ஆனாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் பீஸ்ட் கார் அருகே நின்று செல்பி எடுத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டுள்ளார் மோகன். ட்ரம்புடன் செல்பி எடுப்பது கடினம் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், சில நேரம் நாம் எதிர்பாராதவையும் நடக்கும் என்ற எண்ணத்தில், அவருடன் செல்வி எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று மோகன் கூறியுள்ளார்.