உலகத்தை ஆட்டி படைக்கும் ‘ஒமிக்ரான் வைரஸ்’... அடுத்து என்ன நடக்கும்..? எச்சரித்த WHO !

உலகெங்கிலும் பரவி வரும் ஒமிக்ரான், மிகவும் ஆபத்தான வைரஸாக உருவெடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

The World Health Organization  has issued a new warning that Omicron could become the most dangerous virus in the world

கொரோனா வைரஸின் மாறுபாடான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் தோன்றியது. இந்த தொற்று ஆனது, உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்வுட், ‘ தற்போது உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,  விரைவில் அதிகரித்து பெரிய ஆபத்தினை உண்டாக்கும். ஒமிக்ரான் எவ்வளவு அதிகமாகப் பரவுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது பரவும் ஆபத்து கொண்டவையாக மாற வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார். 

The World Health Organization  has issued a new warning that Omicron could become the most dangerous virus in the world

ஆனால் மற்ற விஞ்ஞானிகள் பலரோ ஒமிக்ரான் அதிக அளவில் பரவினாலும், ஆபத்து ஏற்படாது என்று கூறுகின்றனர். கேத்தரின் ஸ்மால்வுட்டின் கூற்றுப்படி பார்க்கும் போது, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஐரோப்பாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2021ன் கடைசி வாரத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான புதிய கேஸ்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் பேசிய அவர், ‘மேற்கு ஐரோப்பாவில் நோய்த்தொற்று விகிதங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பார்க்க முடிகிறது. இதன் முழு தாக்கம் இன்னும் தெளிவாக இல்லை’ என்று கூறினார்.  இந்நிலையில், பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் கேமரூனிய வம்சாவளியைச் சேர்ந்த புதிய கோவிட் மாறுபாட்டைக் கண்டறிந்து, தற்காலிகமாக அதற்கு `IHU` என்று பெயரிட்டிருக்கின்றனர்.

The World Health Organization  has issued a new warning that Omicron could become the most dangerous virus in the world

மறுபடியும் இன்னொரு வைரஸா ? என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பி.1.640.2 என பெயரிடப்பட்ட இந்த தொற்று, இதுவரை 12 பேரை பாதித்ததாக கூறுகிறார்கள்.  பிரான்சில் நேற்று ஒருநாள் மட்டும்  271,686 வைரஸ் கேஸ்களை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அமெரிக்க சுகாதார அதிகாரிகளின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, கடந்த வாரம் 95% புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு ஒமிக்ரான் மாறுபாடு இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸின் பதிப்பு அதிகமாக உள்ளது. ஜூன் பிற்பகுதியில் தொடங்கி, டெல்டா மாறுபாடு அமெரிக்க நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுப்புது வைரஸ்களின் வருகை ஒட்டுமொத்த உலகத்தையும் கதிகலங்க வைத்திருக்கிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios