கோவேக்சினுக்கு திடீர் தடை.! உலக சுகாதார அமைப்பு போட்ட அதிரடி உத்தரவு.. அச்சச்சோ..?
கோவேக்சின் தடுப்பூசி சக்திவாய்ந்ததுதான், பாதுகாப்பு பிரச்னை ஏதுமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கோவேக்சின் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், அந்த மருந்தின் சப்ளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கோவேக்சின் தடுப்பூசி :
ஐக்கிய நாடுகள் சபை மூலம் பல்வேறு நாடுகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி மருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதை தற்காலிகமாக நிறுத்துவதாக சனிக்கிழமை ஐநாவின் சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு இதை நேற்று முன்தினம் உறுதி செய்தது. இதற்கு உற்பத்தி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த மருந்தின் வீரியம், தரம் குறித்து எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்று ஐநா கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. கோவேக்சின் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து எவ்விதக் கருத்தையும் கூறாமல் கோவேக்சின் உற்பத்தியைக் குறைப்பதாகவும், உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட தரத்திற்கேற்ப உற்பத்தி முறையில் மாற்றம் செய்யப்போவதாகவும் அது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக நிறுத்த முடிவு :
பாரத் பயோடெக் நிறுவனத்தில் அண்மையில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப் பின், அந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் வசதிகளை மேம்படுத்தவும் தயாரிப்புத்துறையில் பற்றாக்குறைகளைச் சரி செய்யவும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து ஐநா சபை, அதன் மூலம் கோவேக்சின் விநியோகம் செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு, அம்மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் காரணம் இல்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் கிருமியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி மருந்தை உருவாக்கின. கோவேக்சின் தடுப்பூசி, டெல்டா போன்ற மரபணு உருமாறிய கொரோனா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.