சீனாவுக்கு எதிராக நாடுகளை தூண்டும் வேலையை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்..!! சீனா கொக்கரிப்பு..!!
அமெரிக்கா உண்மைகளையும் சர்வதேச சட்டத்தையும் வேண்டுமென்றே சிதைக்கிறது, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் நிலைமையை வேண்டுமென்றே பெரிதுபடுத்தி, பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது.
தென்சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை பகிரங்கமாக எச்சரித்துள்ள நிலையில், சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் "முற்றிலும் நியாயமற்றது" என அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா வேண்டுமென்றே தென் சீன கடல் பிராந்தியத்தில் அமைதியை சீர் குலைக்கவும், பிரச்சனையை பெரிதுபடுத்தவும் முயற்சிக்கிறது என சீனா அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளது. தென் சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. ஆதாவது, தென் சீனக்கடல் பகுதியில் உள்ள முக்கிய தீவுகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருவதுடன், அங்கு செயற்கை தீவுகளை அமைத்து தனது பாதுகாப்புக்காக ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்தியுள்ளது. மேலும் கடல் பிராந்தியத்தில் உள்ள, புரூனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
இதனால் அது பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடக்கையை கண்டிக்கும் அமெரிக்கா, சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் அச்சிறிய நாடுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதுடன், சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துவருகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள், ஐநா ஆதரவு கொண்ட நடுவர் மன்றத்தின் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் கொள்கை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ட்ரம்ப்பின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடும் பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது,
சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரிக்கிறது. தென் சீன கடல் பிராந்தியத்தை ஒட்டி சீனாவின் எல்லை உள்ளது, அதற்காக அந்த எல்லைக்கு வெளியே உள்ள கடல் பிராந்தியத்தை சீனா உரிமை கொண்டாடுவது தவறு. தென்சீனக் கடலை அதன் கடல் சாம்ராஜ்யமாக சீனா கருதுவதை இனியும் உலகம் அனுமதிக்காது. அமெரிக்கா தனது தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுடனும், அவர்களின் இறையான்மை, வளம் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக நிற்கிறது. சீனா சர்வதேச விதிமுறைகளை முறையாக மதிக்க வேண்டும். தென்சீனக் கடலில் சீனாவின் கோரிக்கைகள் எதையும் நாங்களோ, எங்கள் நட்பு நாடுகளோ ஏற்கமாட்டோம். இதையும் மீறி சீன ஆக்கிரமிக்க நினைத்தால் அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என பாம்பியோ எச்சரித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு அறிக்கை ஒன்று வெளியானது. அதில கூறியிருப்பதாவது:- அமெரிக்கா உண்மைகளையும் சர்வதேச சட்டத்தையும் வேண்டுமென்றே சிதைக்கிறது, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் நிலைமையை வேண்டுமென்றே பெரிதுபடுத்தி, பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது.
தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சீனாவின் அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாட்டை அமெரிக்கா விதைக்க முயற்சிக்கிறது, தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாகவும், சர்வதேச விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாகவும் அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமற்றது, சீன தரப்பு இதை உறுதியாக எதிர்க்கிறது, அமெரிக்கா நேரடியாக ஈடுபடாத மோதல்களில் தலையிடுகிறது, தென்சீனக்கடல் மட்டும் அல்ல, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அமெரிக்கா அதன் ஆதிக்கத்தை செலுத்துகிறது. பிராந்திய இறையாண்மை விவகாரத்தில் நடுநிலையாக நிற்கும் தென் சீனக் கடற்பகுதியில் உள்ள நாடுகளின் உறுதிப்பாட்டை மனதார மதிக்க வேண்டும். தென் சீனக் கடல் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் அப்பிராந்திய நாடுகளின் முயற்சிகளை மதிக்க வேண்டும் மற்றும் பிராந்திய அமைதி ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் மற்றும் நாசப்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாங்கள் அமெரிக்க தரப்பை அறிவுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.