வந்தவுடனே இந்தியாகிட்ட வேலையை காட்டிய தலிபான்கள்.. ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்தி அட்டகாசம்..

குறிப்பாக ஆப்கனிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான இடையிலான சரக்கு பரிமாற்றம் பாகிஸ்தான் போக்குவரத்து பாதை வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் சூழல் இரு நாட்டுக்கும் இடையே மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை பாதித்திருப்பதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

The Taliban stopped all trade with India, including exports and imports.

தலிபான்கள் இந்தியாவுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என அனைத்துவிதமாக வர்த்தகத்தையும் நிறுத்தி உள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர் அமைப்பின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் தலிபான் பாகிஸ்தான் எல்லையில் ஏராளமான சரக்கு வாகனங்கள் தேங்கி நிற்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் அரசு படைக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத தலிபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்கள் தலிபான்களிடம் விழுந்ததையடுத்து ஒட்டுமொத்த ஆப்கனும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. தலிபான்களின் ஆட்சியின் கீழ் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதால், ஏராளமான ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 The Taliban stopped all trade with India, including exports and imports.

புதிய அரசை நிர்வகிக்கும் நடவடிக்கைகளில் தலிபான்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மறுபுறம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் என ஏராளமான நாடுகள் தங்களது  தூதரகங்களை மூடிவிட்டு வேகமாக வேகமாக நாடு திரும்பி வருகின்றன. இந்நிலையில், தங்களை எண்ணி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும், நாட்டிலேயே மக்கள் அமைதி காக்க வேண்டும் என தலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் யார் மீதும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விட்டதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் பேச்சை நம்பர் மக்கள் தயாராக இல்லை. இதனால் நாட்டின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அண்டை நாடுகளுக்கும் தஞ்சம் அடையும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆப்கனிஸ்தான் முழுவதும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 

The Taliban stopped all trade with India, including exports and imports.

இந்த அசாதாரண சூழ்நிலைகளுக்கிடையிர் இந்தியாவுடனான அனைத்து வித இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளையும் தலிபான்கள் நிறுத்தி உள்ளதாகவும், சாலை மார்க்கமாக வர்த்தகம் செய்வதற்கான பாதைகள் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.2021-2021 ல் இந்தியா ஆப்கனிஸ்தான் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 1.4 பில்லியன் டாலராக இருந்தது. உலர்ந்த திராட்சைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம், அத்திப்பழம், பைன் கொட்டைகள், பிஸ்தா, உலர்ந்த பாதாமி மற்றும் புதிய பழங்களான பாதாமி, செர்ரி, தர்பூசணி மற்றும் சில மருத்துவ மூலிகைகள் போன்றவற்றை ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. மறுபுறம், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தேநீர், காபி, மிளகு மற்றும் பருத்தி, பொம்மைகள், காலணிகள் மற்றும் பல்வேறு நுகர்பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது.  நாட்டை கைப்பற்றியுள்ள தலிபான்கள் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அனைத்து நில வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும், விரைவில் அது திறக்கப்படும் என்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பு உறுப்பினர் ஷகாய் தெரிவித்துள்ளார். 

The Taliban stopped all trade with India, including exports and imports.

குறிப்பாக ஆப்கனிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான இடையிலான சரக்கு பரிமாற்றம் பாகிஸ்தான் போக்குவரத்து பாதை வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் சூழல் இரு நாட்டுக்கும் இடையே மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை பாதித்திருப்பதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தியா ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆப்கானிஸ்தானில் அணைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலை உட்கட்டமைப்பு, ஆப்கன் பாராளுமன்றம் கட்டிடம் போன்றவற்றில் இந்தியா பில்லியன் கணக்கில் நிதியை முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி இறக்குமதி தடை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் பாதாம், பிஸ்தா, உள்ளிட்ட உலர் பழவகைகளின் விலை உயரும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிட தக்கது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios