உடும்பை கொன்றால் 15 டாலர்கள் பரிசு; 1.2 லட்சம் உடும்புகளை கொல்ல இந்த நாடு முடிவு; ஏன் தெரியுமா?

1.2 லட்சம் பச்சை நிற உடும்புகளை கொல்ல ஆசிய நாடு முடிவு செய்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

 The Taiwanese government has decided to kill 1.2 lakh iguanas ray

பச்சை உடும்புகள் 

ஆசிய நாடான தைவானில் பச்சை உடும்புகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உடும்புகள் உள்ளன. கட்டுக்கடங்காமல் உடும்புகள் பெருகி விட்டதால் விவசாயத் துறையில் கடும் பேரழிவை ஏற்படுத்தி விட்டன. இதனால் சுமார் 1.2 லட்சம் உடும்புகளை கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு தைவான் அரசு ஏற்கெனவே சுமார் 70,000 உடும்புகளை கொன்றது. 

ஒரு உடும்புகளை கொல்பவர்களுக்கு 15 அமெரிக்க டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் ரூ.1,300) பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது  சுமார் 1.2 லட்சம் உடும்புகளை கொல்ல முடிவு செய்துள்ளது. உடும்புகளை இயற்கையாகவே வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் உயிரினங்கள் அங்கு இல்லை. இதனால் உடும்புகளின் எண்ணிக்கை பல்கி பெருகி விட்டன.

விவசாயத் துறை பாதிப்பு 

இதனால் காட்டுப்பகுதிகளில் இருந்த உடும்புகள் நகர்ப்புறங்களிலும் சாரை சாரையாக புகுந்து விட்டன. உடும்புகளால் விவசாயத் துறை மட்டுமல்ல, மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் உடும்புகளை கண்டால் உடனே அவற்றை கொல்ல வேண்டும் என்றும் உடும்புகளை கொல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களூம் தெரிவித்துள்ளன.

AP இன் அறிக்கையின்படி, பச்சை நிற உடும்புகள் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியனை பூர்வீகமாகக் கொண்டது. ஆண் உடும்புகள் 2 அடி நீளம் முதல் 6.6 அடி நீளம் வரை வளரக்கூடியவை, 5 கிலோகிராம் (11 பவுண்டுகள்) எடை கொண்டவை. 20 ஆண்டுகள் வரை வாழும். பெண் உடும்புகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும்.

பழங்கள், இலைகள் உணவு 

இந்த உடும்புகளுக்கு கூர்மையான வால்கள், தாடைகள் மற்றும் ரேஸர் போன்ற பற்கள் உள்ளன. ஆனால் இவை ஆக்ரோஷமானவை அல்ல; மிகவும் சாதுவான பிராணிகள். உடும்புகளின் முக்கிய உணவில் பழங்கள், இலைகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை உள்ளன. இப்போது தைவானில் இந்த உடும்புகள் தான் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பழங்கள், இலைகள் மற்றும் தாவரங்கள் என அனைத்தையும் ஒன்று விடாமல் காலி செய்து விடுகிறது. 

இதனால் தான் இவற்றை கொல்வதில் தைவான் அரசு உறுதியுடன் உள்ளது. உடும்புகளை கொடூரமாக கொல்லாமல் மனிதாபிமான முறையில் கொல்ல வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு 30 லட்சம் தெருநாய்களைக் கொல்ல மொராக்கோ அர்சு திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு இப்போதே பல ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

30 லட்சம் நாய்களை கொல்லும் நாடு 

பிஃபா 2030 (FIFA 2030) உலகக் கோப்பை கால்பந்து தொடரை மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக் கோப்பை கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க மொராக்கோ நாடு திட்டமிட்டுள்ளது.  உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்பாக நகரங்களை சுத்தம் செய்யும் வகையில் சுமார் 30 லட்சம் தெருநாய்களைக் கொல்ல மொராக்கோ அர்சு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios