உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அசத்தல்... லண்டன் மைதானத்தில் கோஷம் போட்ட கனிமொழியின் தோழர்..!

தமிழ் வாழ்க பெரியார் வாழ்க கோஷம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததை தொடர்ந்து இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் மைதானத்திலும் எதிரொலித்தது. 

The slogan of London Tamil, Periyar Live

தமிழ் வாழ்க பெரியார் வாழ்க கோஷம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததை தொடர்ந்து இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் மைதானத்திலும் எதிரொலித்தது. The slogan of London Tamil, Periyar Live

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பி பதவியேற்றுக் கொணடனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் போன்ற முழக்கங்களை எழுப்பினர். இது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது. உலக அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. The slogan of London Tamil, Periyar Live

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து விளையாட்டை பார்க்க சென்ற ரசிகர் ஒருவர், தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் நின்றார். தேசியக் கொடியை போர்த்தியிருந்த அவர், கையில் திராவிடர் கழகத்தின் கொடியை வைத்திருந்தார். சிலர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என முழக்கத்தையும் எழுப்பினர். அந்த பதாகை வைத்திருந்தவரின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios