அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நித்யானந்தா இருக்கும் இடம்... இத்தனை கோடி ரூபாய்க்கா தீவை வாங்கினார்..?
அந்த டொமைனை பதிவு செய்தவர்கள் விபரமும் கொடுக்கப்பட்டு இருக்கும். அதன்படி பெயரை மறைத்திருக்கிறார்கள். ஆனால் அஞ்சல் அலுவலக எண் கொடுத்திருக்கிறார்கள். போன் நம்பரும் உள்ளது.
குஜராத் மற்றும் கர்நாடக போலீஸார் தேடி வரும் நிலையில், ஈகுவெடார் நாட்டுக்குச் சொந்தமான தீவு ஒன்றை விலைக்கு வாங்கிவிட்டதாகவும், அந்த தீவுக்கு ‘கைலாசா’என பெயரிட்டு அதனை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் நித்தியானந்தா இறங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
இந்த சர்ச்சைகளும் கதையாடல்களும் ஒருபுறம் நீண்டு கொண்டிருக்க, தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, தனது ஆதரவாளர்களுக்கு, தினமும் இணையத்தளம் மூலம் சத்சங்கம் உரை நிகழ்த்தி வருகிறார். அவர் எங்கிருந்து பேசிவருகிறார் என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில், நித்யானந்தா இருக்கும் இடம் குறித்து ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் கூறுகையில், ‘’ஒரு வெப்சைட்டை நாம் ஆரம்பிக்க வேண்டுமானால் நிறைய நடைமுறைகள் இருக்கிறது. டொமைன் பெயர் இருக்கிறது. கைலசா என்கிற பெயரில் டொமைன் பதிவு செய்யப்பட்டு இருந்தால் தான் அந்த வெப்சைட்டை நடத்த முடியும். அந்த வெப்சைட்டிற்கு இரு சர்வர் தேவை. அந்த சர்வர் எங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் முக்கியம். ஆகையால் www.kailaasa.org என்கிற வெப்சைட் உண்மையிலேயே செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தோம். அந்த வெப்சைட் செயல்படுகிறது.
அதன் மூலம் சில தகவல்களை எடுத்தோம். இந்த டொமைன் பெயரை எங்கே இருந்து பதிவு செய்திருப்பார்கள் என்பதை உள்ளே சென்று பார்க்கும்போது, மத்திய அமெரிக்காவில் இருக்கக்கூடிய பனாமா தீவில் இருந்து 2018 அக்டோபர் மாதம் பதிவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே பதிவு ஆகி இருக்கிறது என்றால் அந்தத் தீவை அதற்கு முன்பே அவர் வாங்கி இருக்க வேண்டும். அந்த டொமைனை பதிவு செய்தவர்கள் விபரமும் கொடுக்கப்பட்டு இருக்கும். அதன்படி பெயரை மறைத்திருக்கிறார்கள். ஆனால் அஞ்சல் அலுவலக எண் கொடுத்திருக்கிறார்கள். போன் நம்பரும் உள்ளது.
அந்த இணையத்தின் டொமைனை மறுபதிவு செய்யும்போது அது கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகையால் கலிஃபோர்னியா, அல்லது பனாமா ஆகிய பகுதிகளில் தான் அவர்களது நடமாட்டம் இருக்கிறது. இரண்டுமே மத்திய அமெரிக்காவில் இருக்கக்கூடிய பகுதிகள்.
கலிஃபோர்னியாவில் அவர் இருக்க முடியாது என்பது எனது கருத்து. ஏனென்றால் அமெரிக்காவுக்கும்- இந்தியாவுக்கும் ஒரு உடன்பாடு இருக்கிறது. அதாவது குற்றவாளிகள் இங்கிருந்து அங்கு சென்றாலோ அல்லது அங்கிருந்து இங்கு வந்தாலோ இரு தரப்பினரும் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.
அதனால் கலிஃபோர்னியாவில் இருந்தால் அவர்களை இந்தியா கேட்டுக் கொண்டிருந்தால் அமெரிக்கா அவர்களை ஒப்படைத்து விடும். பனாமா தீவில் அவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பனாமா எந்த நாட்டு கடல் எல்லையில் இருக்கிறது எனப் பார்த்தால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் இருக்கிறது. இந்த கடல் பகுதிகளில் நிறைய தீவுகள் இருக்கின்றன. ரூ 60 கோடியில் இருந்து 150 கோடி வரை நிறைய தீவுகள் விற்பனைக்கு இருக்கிறது. அப்படி விற்பனை செய்யப்பட்ட தீவைத்தான் அவர் வாங்கி இருக்க வேண்டும்’’எனக் கூறுகிறார்.