கொரோனா தடுப்பூசி வந்தாலும் இதே நிலைதான்... அதிர்ச்சியூட்டும் மருத்துவ விஞ்ஞானி..!
கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், மக்கள் மாஸ்க் அணிவதையும், சமூக விலகலையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், மக்கள் மாஸ்க் அணிவதையும், சமூக விலகலையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாய்லார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த பேராசிரியரும், தடுப்பூசியை உருவாக்கும் விஞ்ஞானியுமான மரியா எலன்னா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “கொரோனா பாதிக்கபட்ட நபருக்கு தடுப்பூசி போட்டால். அது பாதிப்பை குறைக்குமே தவிர, அது முழுமையாக அழியாது. கொரோனா தடுப்பூசிகள் வெற்றிகரமானதாக இருந்தாலும், அவை ஒரு மேஜிக் தீர்வாக இருக்காது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், நிச்சயம் உங்கள் மாஸ்குகளை நீங்கள் தூக்கி எறிந்துவிட முடியாது.
இது நடக்கப்போவதில்லை. தடுப்பூசி என்பது நிரந்தர தீர்வாக இருக்கும் என்று மக்கள் நினைக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன். கொரோனா தடுப்பூசிகள் பாதிப்பை குறைக்கலாம், தொற்றில் வரும் முன்பு நம்மை பாதுகாக்காது”என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 26 தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த 26 தடுப்பூசிகளில் 5 தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனைக்கு முன்னேறியுள்ளன.
தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 17.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6.78 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.