ஆட்சி அதிகாரமெல்லாம் தர முடியாது... குழந்தைகளை பெற்றுக்கொள்வதே பெண்களின் கடமை... தலிபான்கள் திட்டவட்டம்..!
ஆப்கானிஸ்தானில் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என திட்ட வட்டமாக அறிவித்துள்ளனர் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானில் புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை என திட்ட வட்டமாக அறிவித்துள்ளனர் தலிபான்கள்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஜெக்ருல்லா ஹஷிமி, ‘’குழந்தைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது தான் ஆப்கன் பெண்களின் கடமை. ஒரு பெண்ணால் அமைச்சராக முடியாது. பெண்ணுக்கு கழுத்தில் அணியும் ஆபரணம் போல் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எனினும், பெண்களால் அமைச்சர் பதவியின் பொறுப்புகளை சுமக்க முடியாது.
அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்பது தேவையில்லாத சர்ச்சை. குழந்தைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது தான் அவர்களின் கடமை. குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கற்பிக்க வேண்டியது தான் ஆப்கன் பெண்களின் பணி’’ என அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் இங்குள்ள மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, தலிபான் அறிவித்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பிடிக்கவில்லை. இது பெண்கள் மீதான தலிபானின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருந்தது.