நேருக்கு நேர் மோத வந்த விமானம்...! தலைகீழாக விமானத்தை செலுத்தி விபத்தை தவிர்த்த விமானி..!
ஆஸ்திரேலியாவின் குவாண்டா நிறுவன விமானம், இரு தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, காற்றின் சுழற்சி காரணமாக, இந்த விமானம் மீது மோதுவது போல மற்றொரு விமானம் வந்தது கடைசி நேரத்தில் அறியப்பட்டது.
இரண்டும் மோதுவதைத் தடுக்க, ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே குவாண்டா விமானத்தை இறக்க விமானிகள் துரிதமாக முடிவெடுத்தனர்.
அதன்படி 20 நொடிகள் வரை விமானத்தை தலைகீழாக இயக்கிய அவர்கள், பாதுகாப்பான இடத்தை அடைந்தனர். என்ன நடக்கிறது என்று அறியாமலேயே பயணிகள் அனைவரும் விமானத்தில் தலைகீழாகவே பயணித்தனர்.
பின்னர், பயணிகளுக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கப்பட்டதாக குவாண்டோ விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
நடுவானில் ரோலர்கோஸ்டரில் சென்றது போல இருந்ததாகவும், நிலைமையை விமானிகள் சிறப்பாக கையாண்டதாகவும் பயணிகள் சாதுர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.