ஒரே ஒரு பீரின் விலை 48 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்...கிறுகிறுத்துப்போன கிரிக்கெட் செய்தியாளர்...

பீரைக் குடித்து போதை ஆவதற்குப் பதிலாக அதற்குப் போடப்பட்ட பில்லைப் பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார் ஒரு கிரிக்கெட் செய்தியாளர்.பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகின் விலை உயர்ந்த பீரை அருந்திய பெருமை பெற்றவன்’என்ற கமெண்டுடன் அந்த பீர் கிளாஸின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

the most expensive beer in history"

பீரைக் குடித்து போதை ஆவதற்குப் பதிலாக அதற்குப் போடப்பட்ட பில்லைப் பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார் ஒரு கிரிக்கெட் செய்தியாளர்.பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகின் விலை உயர்ந்த பீரை அருந்திய பெருமை பெற்றவன்’என்ற கமெண்டுடன் அந்த பீர் கிளாஸின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.the most expensive beer in history"

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் செய்தியாளர் பீடர் லலோர் என்பவர்  பியர் குடித்ததற்கு, 55,000 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 48 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய். பில் தனது டேபிளுக்கு வரும்போது கண்ணாடி அணியாமல் இருந்ததால் அந்தத் தொகையைக் கவனிக்காமல் தனது கார்டை ஸ்வைப் செய்த அவர் அறைக்குத் திரும்பியவுடம் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

பின்னர் ரிசப்ஷனுக்கு திரும்பிய பீடர் தனக்கு நேர்ந்த தவறுக்குப் புகார் கொடுக்கவே தவறாக பில் கொடுத்ததற்கு ஹோட்டல் நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.எனினும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 55,000 பவுண்டுகள் எடுக்கப்பட்டுவிட்டது.கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் அவருக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பீடர் ‘தி ஆஸ்திரேலியன்’என்னும் பத்திரிகையில் கிரிக்கெட் செய்திகள் எழுதிவரும் பத்திரிகையாளர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios