The head of the snake that has been cut off by the cutter
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வெட்டப்பட்ட பாம்பின் தலைக்கு உயிர் வந்து, தன்னுடைய தலையை வெட்டியவரை கடித்த பழி தீர்த்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி, ஹுஸ்டன் நகரை சேர்ந்த ஜெனிபர் சுட்கிளிப் என்ற பெண்ணின் கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தோட்டத்தில், மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு வகை ஒன்று செடிகளுக்குள் ஓடி மறைந்தது.
அப்போது, அந்த பாம்பை தேடி பிடித்து அந்த இளைஞர் பாம்பின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். பின் சில நிமிடம் கழித்து வெட்டி பாம்பின் உடலையும் தலையையும் குப்பையில் போட எடுத்துள்ளார். அப்போது திடீர் என இறந்த பாம்பின் தலைக்கு உயிர் வந்து அவரை கண் இமைக்கும் நேரத்தில் கொத்தியுள்ளது.
இந்த பாம்பின் விஷம் மிகவும் கடுமையானது என்பதால், விரைவாக அவரது உடலில் பரவியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் தற்போது பாம்பின் விஷம் தாக்கியதால், இவருக்கு கண் பார்வை பறிபோய் விட்டதாகவும், உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இவர் உயிர் பிழைப்பது அரிது என்றும் தெரிவித்துள்ளனர்.
