மலேசியாவில் விடுதியுடன் கூடிய முதல் தமிழ் பள்ளி தயார்!
மலேசியாவின் சிலாங்கூர் ஷா ஆலமில் உள்ள SJK(T) Ladang Midlands உள்ள பள்ளியில் புதிய மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில், 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளி, விடுதி வசதிகளைக் கொண்ட முதல் தமிழ் வட்டார மொழி தொடக்கப் பள்ளியாகும்.
மாநில அரசின் நிதியுதவியுடன், பள்ளிக்கு அருகில் இந்த விடுதி RM4 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில், சுமார் 200 மாணவர்கள் வரை தங்கும் வசதி கொண்டது. இது பொது குளியலறைகள், ஒரு சலவை அறை மற்றும் ஒரு கேண்டீன் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய SJK(T) Ladang Midlands பள்ளி வாரியத் தலைவர் உதயசூரியன் காளிமுத்து, ஷா ஆலம் B40 சமூகத்தை மனதில் கொண்டு இந்த மாணவர் விடுதி கட்டப்பட்டது என்றார்.
மேலும், சிலாங்கூரில் உள்ள பல குழந்தைகள் தங்கள் வீட்டுச் சூழல், வறுமை அல்லது போக்குவரத்துச் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதைக் கண்டறிந்ததாக தெரிவித்தார். பள்ளியிலேயே விடுதி அமைத்தன் மூலம், அதிகமான குழந்தைகளுக்கு அவர்கள் தகுதியான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதை நாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள இந்திய சமூகத்தின் வறுமைப் பிரச்சினைகளைச் சமாளிக்க இந்த மாணவர் விடுதி பெரும் உதவியாக இருக்கும் என்று சிலாங்கூர் இந்திய ஆலோசனைக் குழுவின் (SICC) தலைவர் சார்லஸ் சாண்டியாகோ கூறினார்.
பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில்.. 1000 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..
இப்பகுதியில் உள்ள மூன்று பெரிய இனங்களில், இந்திய சமூகம் மிகவும் ஏழ்மையானது என்றும், இந்திய மாணவர்களிடையே இடைநிற்றல் விகிதம் 15% அல்லது 20% வரை அதிகமாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. விடுதி மூலம் அணுக முடியாத பிரச்சனையை நாங்கள் தீர்க்க முடியும் மற்றும் கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்களுக்காகவும் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
விவாகரத்து கொடுக்க மறுத்த கணவருக்கு சிறை: சிங்கப்பூரில் அதிரடி!