கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் வெற்றி பெற்று இருப்பதாக ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகத்தின் ட்ரான்ஸ்லேசன் மெடிசின் மற்றும் பயோ டெக்னாலஜி இயக்குனர் வாடிம் தாராசோவ் கூறுகையில், ‘’செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டது.

ஜூன் மாதம் 18-ம் தேதி இந்த சோதனைகள் தொடங்கப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்து முதல் குழுவினர் வருகின்ற புதனன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அடுத்த குழுவினர் வருகின்ற 20-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்’’ என்று கூறியிருக்கிறார். இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள ஹேமலை இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெயாலொஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. எனினும் இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் கொரோனாவை விரட்டியடிக்கும் காலம் விரைவில் வரப்போகிறது.