ஒரே சமயத்தில் 32 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கும் நிறுவனம்... ஊழியர்கள் அதிர்ச்சி..!

வால்ட் டிஸ்னி குழுமத்திலிருந்து சுமார் 32ஆயிரம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

The company will lay off 32 thousand people at once ... Employees shocked ..!

உலகம் முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள் அடியோடு முடங்கிப் போனது. இதனால் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்தது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது. இதன் காரணமாக தங்களின் வேலை பறிபோகுமா என்ற பயம் பல முன்னணி நிறுவனங்களில், உயரிய பதவிகளில் இருந்தவர்களுக்கு கூட தோன்றியது.The company will lay off 32 thousand people at once ... Employees shocked ..!

இந்நிலையில் அமெரிக்காவின் ஓர்லண்டோ மாகாணத்தில் உள்ள பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி குழுமத்திலிருந்து சுமார் 32ஆயிரம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொது முடக்கம் அமல்படுத்தப் பட்ட நாளிலிருந்து இந்த டிஸ்னி லாண்டும் மூடப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இதன் கிளைகள் மூடப்பட்டன. இதனால் வால்ட் டிஸ்னி கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்தது.The company will lay off 32 thousand people at once ... Employees shocked ..!

இந்நிலையில் டிஸ்னி குழுமம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. முதலில் 28ஆயிரம் பேர் நீக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 32ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios