Asianet News TamilAsianet News Tamil

கூழாங்கற்களை சமைத்து உண்ணும் சீனர்கள்... அடேய் கல்லையுமா சாப்புடுவீங்க?!

சீனாவில் கூழாங்கற்களை சமைத்து உண்ணும் வீடியோ பேசுபொருளாகியுள்ளது. 

The Chinese eat stir-fried stones rocks the internet
Author
First Published Jun 23, 2023, 11:06 AM IST

சீனாவில் விதவிதமான உணவுகள் கிடைக்கும். இறைச்சியை பலவிதங்களில் சமைப்பார்கள். அந்நாட்டில் இரவு நேரங்களில் வெளியே சென்றால் சாலையோர கடைகளில் பூண்டு, மிளகாய் போன்றவை சேர்த்து கூழாங்கற்களையும் வறுத்தெடுப்பதை காணலாம். பார்க்க வினோதமாக இருந்தாலும் சீனாவில் உள்ள பிரபலமான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. இந்த உணவை சொடியு (Suodiu) என்கிறார்கள். 

இந்த உணவில் கற்களை போட்டு சமைக்கிறார்கள்... நம் ஊரில் கூட வேர்கடலை வறுக்கும்போது மணல் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதை மண்ணோடு நாம் உண்பதில்லை. ஆனால் இந்தசொடியு உணவை பரிமாறும்போது கற்களோடுதான் கொடுக்கிறார்கள். இந்த உணவை குறித்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ருசியான உணவு என்று சீனர்கள் இதை கூறினாலும், வைரலான வீடியோவில் கற்களை முகம் சுளித்தபடியே துப்புவதை காண முடியும். ஙே.. கல்லை எப்படிங்க சாப்புடுறது??!! 

அண்மையில் வைரலான வீடியோவை கிட்டத்தட்ட 800,000 பேர் பார்த்துள்ளனர். இந்த suodiu உணவின் விலை 16 யுவான் (ரூ.181.34 ). இதில் உள்ள கற்களை மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு சிலர் விலை உயர்ந்ததாகக் கூறினர். 

இந்த உணவு இப்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. முந்தைய காலத்தில் ஹூபேயின் நிலப்பரப்பு மாகாணத்தில் படகு ஓட்டுபவர்கள், யாங்சே ஆற்றின் வழியாக பயணிக்கும்போது இறைச்சியும், காய்கறிகளும் தீர்ந்துவிட்டதாம். அப்போது கனிமங்கள் நிறைந்த இந்த கற்களை சமைக்க பயன்படுத்தியுள்ளனர். இந்த உணவின் ஒரு வரலாற்றின் படி, பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு அது பிரபலமடைந்தது.  

இதையும் படிங்க: கண்டிப்பா ஒருமுறை பார்க்க வேண்டிய உலகின் 10 வித்தியாசமான உணவுகள்..!

காலப்போக்கில் மோட்டார் பொருத்தப்பட்ட கப்பல்கள் ஹூபேக்கு வந்தன. படகு ஓட்டுபவர்கள் சமைக்கப் பொருட்கள் இல்லாமல் சிக்கித் தவிக்கும் வாய்ப்புகளும் குறைந்தது. ஹூபே, ஹுனான் மற்றும் குய்ஜோவின் எல்லைகளைக் கடக்கும் வுலிங் மலைத்தொடரில் இருந்து தோன்றிய சிறுபான்மை இனமான துஜியா மக்களுடனும் இந்த உணவு இணைக்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் ஒருவர் இப்படியாக எழுதியுள்ளார்:"நதியில் உள்ள கற்கள் இயற்கையாகவே மீன் சுவை கொண்டவை. அவை அதிக வெப்பத்தில் வறுக்கப்படும் போது சுவை அதிகரிக்கின்றன. ஆனால் அவர்களின் சமையல் முறையீடு எதுவாக இருந்தாலும், பலருக்கு நம்பிக்கை இல்லை"எனக் கூறியுள்ளார். சிலர் இந்த உணவால் மூச்சுத்திணறல் அபாயங்களை சந்திப்பதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க: உணவு குறித்த கனவுகளுக்கு இவ்வளவு அர்த்தங்களா? இதோ 7 கனவுகளின் விளக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios