புதிய அதிபர்.. தர்மன் சண்முகரத்தினம் வெற்றியை கொண்டாடும் சிங்கப்பூர்.. மகிழ்ச்சியில் மக்கள் - முழு விவரம்!
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் சுமார் 70-க்கும் அதிகமான சதவீத வாக்குகளை பெற்று இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பூரின் புதிய அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மக்கள் அதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். தன்னுடன் இணைந்து அதிபர் பதவிக்காக போட்டியிட்ட மற்ற இருவரை காட்டிலும் 70% அதிக வாக்குகளை பெற்று சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதை கொண்டாடும் வண்ணம் சிங்கப்பூரில் உள்ள பீங்கோலேன் சாலையில் உள்ள ஒரு கடையில் மக்களுக்கு ஒரு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. நேற்று செப்டம்பர் 2ஆம் தேதியும் இன்று செப்டம்பர் மூன்றாம் தேதியும் இந்த ஆஃபர் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் பெற ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குழு அன்னாசி பழத்தை பிரதிபலிக்கு ஆடைகளைஅணிந்து வர வேண்டும்.
சிங்கப்பூர் அதிபர் ஆனார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்.. மாபெரும் வெற்றி !!
அப்படி வந்தால் அவர்களுக்கு இலவச அன்னாசிப்பழ சோஜூ வழங்கப்படும். இதனையடுத்து அன்னாசி பழ சட்டை மற்றும் பொம்மையை அணிந்து வந்தவர்களுக்கு அந்த கடையில் இலவசமாக 1.5 லிட்டர் அன்னாசிப்பழ சோஜூ வழங்கப்பட்டது.
சோஜூ என்பது கொரியாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு வகை மதுபானமாகும். சிங்கப்பூரிலும் அதை மக்கள் அதிக அளவில் விரும்பி குடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் நேற்றும் இன்றும் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தர்மன் சண்முக ரத்தனத்திற்கு வழங்கப்பட்ட சின்னம் பைனாப்பிள் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.