Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்தில் கடும் வறட்சி… இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டது தேம்ஸ் ஆறு!!

இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 

thames river in england is at its driest ever
Author
England, First Published Aug 12, 2022, 6:13 PM IST

இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக ஜூலை மாதம் திகழ்கிறது. சராசரி மழைப்பொழிவு 23.1 மில்லிமீட்டராக உள்ளது. இது மாதத்தின் சராசரி மழையில் 35% மட்டுமே. தேம்ஸ் நதியின் ஆதாரம் முன்னெப்போதையும் விட வறண்டுவிட்டது, இங்கிலாந்து கடும் வறட்சியை சந்திக்க உள்ளதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர். அந்நாட்டின் ஜூலை மாதம் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவியது. தேம்ஸ் ஆறு தெற்கு இங்கிலாந்து முழுவதும் 215 மைல்கள் (356 கிலோமீட்டர்) மேற்கில் க்ளூசெஸ்டர்ஷயரில் இருந்து லண்டனின் மையப்பகுதி வழியாக கிழக்கே எசெக்ஸில் கடல் வரை நீண்டுள்ளது.

இதையும் படிங்க: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023லிருந்து பவுடர் விற்பனையை நிறுத்துகிறது

நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு வறண்ட ஆற்றுப்படுகை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் நான்கு நாள் அதிக வெப்பம் எச்சரிக்கை அமலுக்கு வந்தது. கடந்த மாதம் முதல் முறையாக 40C (104F) வெப்பநிலையை மீறிய போது, வானிலை அலுவலகம் இதுபோன்ற முதல் எச்சரிக்கையை வெளியிட்டது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தங்குவதற்கான அவகாசம் முடிந்தது… தாய்லாந்துக்கு சென்றார் கோட்டபய ராஜபக்சே!!

இதுக்குறித்து பருவநிலை நிபுணரும், ரீடிங் பல்கலைகழகத்தின் நீரியல் நிபுணருமான ஹன்னா க்ளோக் கூறுகையில், குறைந்த மழைப்பொழிவு ஆற்றின் நீர்மட்டத்தையும், நீர்நிலைகளையும் குறைத்துள்ளது, அதே நேரத்தில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யவும், குடிநீரை நிரப்பவும் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தவும் நீர்வழிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நமக்கு மழை பெய்யவில்லை என்றால், உண்மையில், நாம் வறண்ட குளிர்காலத்தை சந்திக்கூடும். வசந்த காலத்திலும் அடுத்த கோடைகாலத்திலும் நீர் ஆதரங்களில் நீர் இல்லாதபோது கடுமையான சிக்கலை சந்திக்கக்க நேரிடும் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios