பெண்கள் உடையில் சிக்ஸ்பேக் ஆண்கள்... தாய்லாந்தில் ஒரு விநோத ஓட்டல்...!

https://static.asianetnews.com/images/authors/908e43a0-03e4-4c3c-8d58-18cffd729eb9.jpg
First Published 12, Jan 2019, 4:24 PM IST
Thailand Restaurant...Goes Viral for Its Hunky Waiters
Highlights

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் பெண்கள் அணியும் உடையை அணிந்துகொண்டு பரிமாறும் சிக்ஸ்பேக் ஆண்களால் கூட்டம் அலைமோதுகிறது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் பெண்கள் அணியும் உடையை அணிந்துகொண்டு பரிமாறும் சிக்ஸ்பேக் ஆண்களால் கூட்டம் அலைமோதுகிறது.

பாங்காங்கில் ‘ஸ்டானீமீஹோய்’ என்ற உணவகம் உள்ளது. இது மற்ற உணவங்கங்களில் இருந்து வித்தியாசமானது. இந்த உணவகத்தின் உணவுகளைவிட உணவு பரிமாறும் ஆண்களின் உடை, நடை, பாவனைகள்தான் வாடிக்கையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. உணவக ஊழியர்கள் அனைவரும் சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் பெண்களின் உடைகளை அணிந்து விநோதமாகக் காட்சியளிக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்று உணவகத்தின் உரிமையாளரான 34 வயது வீராசாக் மேசா கூறுகையில், “ ஸ்டானீமீஹோய் என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கிய பிறகு கூட்டமே வரவில்லை. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே கஷ்டப்பட்டேன். உணவகத்தைப் பிரபலமாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னுடைய உணவகம் பிரபலமாகும் என்று யோசித்தேன்.  உணவகத்துக்குள் நுழையும்போதே மக்கள் புன்னகையுடன் வரவேண்டும். சாப்பிட்டுக் கிளம்பும்வரை அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 

ஆண் மாடல்களை உணவக ஊழியர்களாக நியமிக்கும் யோசனை வந்தது. ஆனால் அது உணவகத்தின் விற்பனையைப் பல மடங்கு உயர்த்துமா என்ற சந்தேகமும் இருந்தது. இறுதியில் ஆண் மாடல்களுக்குப் பெண்கள் அணியும் கவர்ச்சியான உடைகளை அணிய வைப்பது என்று முடிவு செய்தேன். இந்தம் முடிவை கேட்டு பலரும் சிரித்தனர். உணவகத்தை 3 மாதங்கள் மூடினேன். வேலைக்குச் சேர்ந்தவர்கள் கூட இந்த உடை என்றதும் வர மறுத்துவிட்டார்கள். வழக்கத்தைவிட நல்ல சம்பளம் பேசி, பயிற்சியளித்தேன். 

புதிய உணவகத்தைத் திறந்தேன். வெகு விரைவில் நான் விளம்பரம் செய்யாமலே உணவகம் பிரபலமானது. எங்கள் ஊழியர்களைப் பார்ப்பதற்காகவே வெகு தூரத்திலிருந்து மக்கள் வரத் தொடங்கிவிட்டனர். வியாபாரம் பெருகியது. பெண்கள் ரசிக்க மாட்டார்களோ என்ற அச்சம் முதலில் இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ரசிக்கிறார்கள். ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இந்த வெற்றி தந்த நம்பிக்கையில் பலரும் கிளைகள் ஆரம்பிக்கச் சொல்லி எங்களை வற்புறுத்தி வருகிறார்கள்” என்று பெருமையாக சொல்கிறார். விநோதமான வெற்றி ஃபார்மூலாத்தான். அதற்காக இப்படியா செய்வது?

loader