Elon Musk Spoon Balancing Video : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான இரவு விருந்தின் போது எலான் மஸ்க் தனது சுண்டு விரலால் 2 ஸ்பூன் மற்றும் ஃபோர்க்கை நிறுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் இரவு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சாகச வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 15ஆம் தேதி புளோரிடாவின் பாம் பீச்சிலுள்ள தனது மார் எ லாகோ எஸ்டேட்டில் டொனால்ட் டிரம்ப் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார். அந்த டின்னருக்கு ஒரு இருக்கைக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1 மில்லியன் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Scroll to load tweet…

இந்த விருந்து நிகழ்ச்சியில் எலான் மஸ்க் தனது சுண்டு விரலில் 2 ஸ்பூன் மற்றும் ஒரு ஃபோர்க்கை கொண்டு சாகசம் செய்துள்ளார். அதாவது, 2 ஸ்பூன் மற்றும் ஒரு ஃபோர்க்கை தனது சுண்டு விரலில் நிறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது டிரம்ப் மற்றும் ஷிவோன் ஜிலீஸ் ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரபஞ்ச ரகசியங்களை வெளிப்படுத்தும் டாப் 6 கேலக்ஸி புகைப்படங்கள்!

இந்த இரவு விருந்துக்கான நோக்கம் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட விருந்துக்கான அழைப்பிதழில் MAGA INC என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தாக கூறப்படுகிறது. இந்த இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் மறந்த இந்திய கோலி சோடாவுக்கு.. அமெரிக்கா, ஐரோப்பாவில் எகிறும் மவுசு