இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி!
துருக்கியில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபரால் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் பலியானார்கள்.40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள பிரபல இரவு விடுதி ஒனறில், உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு தினத்தை கொண்டாட திரண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் மக்கள் திளைத்திருந்தபோது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த ஒருவன், துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி திடீரென சுட்டதில் மக்கள் செய்வதறியாது ஓடினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியை சுட்டுக்காென்றதாக என இஸ்தான்புல் போலீஸாா் தெரிவித்துள்ளனர்.
இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 40-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தேவையான அவசர உதவிகளை செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக துருக்கி அரசிடம் தொிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:55 AM IST