Asianet News TamilAsianet News Tamil

என்ன அமெரிக்காவுக்கு சப்போர்ட்டா? தொலைச்சிடுவேன் பாத்துக்கோ... பகிரங்கமாக எச்சரித்த சீனா..!

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவும் வழிமொழிந்து உள்ளதால் கடுமையான ஆத்திரத்தில் சீனா இருந்து வருகிறது.

Tensions between China-Australia rising due to COVID-19 issue
Author
China, First Published May 2, 2020, 6:20 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவும் வழிமொழிந்து உள்ளதால் கடுமையான ஆத்திரத்தில் சீனா இருந்து வருகிறது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளது. இதுவரை உலகளவில் சுமார் 34,00,000 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி போயுள்ளது. 

Tensions between China-Australia rising due to COVID-19 issue

இந்நிலையில், அமெரிக்கா சீனா உலகில் கொரோனாவை பரப்பியதால் 184 நாடுகள் நரக வேதனை அனுபவித்து வருவதாகவும், இதற்காக சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்  தெரிவித்திருந்தார். அமெரிக்க செனட் சபையினரும் சீனாவுடனான வர்த்தக சார்பைக் குறைத்துக் கொள்ள நடவடிக்கை தேவை என்று  டிரம்புக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.

Tensions between China-Australia rising due to COVID-19 issue

இந்நிலையில் கொரோனா வைரசை, பல்வேறு நாடுகளுக்கும் சீனா பரப்பி விட்டதாகவும், இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு, ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது சீனா குறித்த விசாரணை தேவை என்ற ரீதியில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா பேசியுள்ளது.

Tensions between China-Australia rising due to COVID-19 issue

இது தொடர்பாக சீனா தெரிவிக்கும்போது, சீன தூதரகம் சிறுமைத்தனமான தந்திரங்களை மேற்கொள்ளாது. இது எங்கள் மரபு கிடையாது. ஆனால் மற்றவர்கள் செய்தால் நாங்கள் திரும்ப பதிலடி கொடுப்போம். சீனாவின் நுகர்வோர்கள் ஆஸ்திரேலியப் பொருட்களை கைவிடுவார்கள். பல்கலைக் கழகங்களும் சிக்கலாகும், சீன மாணவர்களும், சுற்றுலா பயணியரும், ஆஸ்திரேலியா வருவதை புறக்கணிப்பர். ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி மற்றும் வைன் மது வகைகளுக்கு சீனா தடை விதிக்கும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios