குடிபோதை.. கடுப்பில் சக ஊழியரின் கட்டைவிரலை கடித்த தமிழர் - அதிரடியாக தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!
Singapore : சிங்கப்பூரில் இருவருக்கு மத்தியில் ஏற்பட்ட சண்டை முற்றியநிலையில், குடிபோதையில் சக ஊழியரின் ஆள்காட்டி விரலின் ஒரு பகுதியைக் கடித்ததற்காக, 40 வயது இந்தியர் ஒருவருக்கு இன்று வெள்ளிக்கிழமை அன்று 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை, இந்தியர்களின் இரண்டாம் தாயகம் என்று அழைப்பார்கள், அந்த அளவிற்கு இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் அதிகம் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர். அங்கு தமிழ் ஒரு ஆட்சி மொழியாக இருப்பதும், தர்மன் சண்முகரத்தினம் உள்பட பல தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்கள் அரசு பொறுப்புகளில் இருப்பதுமே அதற்கு சாட்சி.
இந்நிலையில் சிங்கப்பூரில் பணி செய்து வரும் இரு தமிழர்கள் இடையே கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. இயந்திர ஓட்டுநராக பணியாற்றிய தங்கராசு ரெங்கசாமி, தன்னுடன் பணியாற்றி வந்த நாகூரன் பாலசுப்ரமணியனின் இடது ஆள்காட்டி விரலை கடித்து காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
சூரியனை போன்ற நட்சத்திரம் பிறப்பு: அரிய புகைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரெங்கசாமி மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் குற்றம் நடந்தபோது சிங்கப்பூரின் காக்கி புக்கிட்டில் உள்ள தனித்தனி வெளிநாட்டு தொழிலாளர் தங்கும் விடுதியில் வசித்து வந்தனர் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்பு, நாகூரன் (50 வயது), மற்றும் கட்டுமான தொழிலாளி ராமமூர்த்தி ஆனந்தராஜ் (வயது 33), ஆகியோர், கடந்த ஆண்டு ஏப்ரல் 2022ல், தங்கள் விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த ரங்கசாமி, ராமமூர்த்தியை பார்த்து சத்தத்தை குறைத்து பேசுமாறு கூறியுள்ளார், இது அப்படியே சிறு வாக்குவாதமாக மாற, இறுதியில் கைகளப்பாக சென்று முடிந்துள்ளது.
இந்த கைகலப்பில் தான் குற்றவாளி ரங்கசாமி, பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியத்தின் இடது ஆள்காட்டி விரலை கொடூரமாக கடித்து உள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட, பாலசுப்ரமணியன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்பொழுது மருத்துவர்கள் அவருடைய கட்டை விரலில் சிறு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் இன்று செப்டம்பர் 15 2023 அன்று, குற்றவாளிக்கு 10 மாத சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பல நாட்டு தலைவர்களை உள்ளடக்கிய சர்வே.. தொடர்நது முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி - முழு விவரம் இதோ!