ராஜிவ் படுகொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை..!! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அறிக்கை..!!

இந்திரா காந்தி அம்மையார் மறைவுக்குப் பின்பும் அவரது புதல்வரான இந்திய முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவை பேணி வந்துள்ளார். என்பதையும் இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறோம்.  இந்திய அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் உள் நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும் அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் இந்திய பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை என உறுதியாக கருதுகிறோம்.

tamil eelam viduthalai pulikal (LTTE) press release regarding rajiv assassination

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் முழு விவரம் :-

 tamil eelam viduthalai pulikal (LTTE) press release regarding rajiv assassination

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம்.  நாங்கள் போராட்ட குழுவை, ஆயுதக் குழுவோ,  வன்முறை இயக்கமோ,  அல்ல.  மாறாக தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.  எங்கள் ஆயுத மௌனித்ததற்குப்  பிறகும் இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளை காத்து வந்துள்ளோம்.  எனினும் எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த வீடிவோ, தீர்வோ, இதுவரை கிடைக்கவில்லை.  இன்றளவும் எம்மக்கள் திட்டமிட்ட இனவழிப்பிற்கு உட்படுத்தப் படுகிறார்கள். புலிகள் இல்லையென்றால் இவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்று அறிவுரை கூறியவர்கள் எல்லாம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும் ஆதாரங்கள் பலவற்றை எடுத்து  விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. தொடர்கின்ற இதுபோன்ற தவறான பிரச்சாரத்தால் எம்மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

tamil eelam viduthalai pulikal (LTTE) press release regarding rajiv assassination

 சிலர் ஒரு படி மேலே சென்று, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் உயிர் முன்னாள் பாரதப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்று உரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்திய தலைமையை சீர்குலைக்கும் திட்டமோ இந்தியாவை தாக்கும் திட்டமோ என்றும் புலிகளிடம் இருந்ததில்லை இலங்கையை சாராத எந்த ஒரு நபருக்கும், தலைவருக்கும் எதிராக நாங்கள் ஒருபோதும்  ஆயுதம் ஏந்தவும் இல்லை,  திட்டம் தீட்டவும் இல்லை. குறிப்பாக எந்த ஒரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயற்பட நாங்கள் எப்பொழுதும் எண்ணியதில்லை.  எங்கள் ஆயுதங்கள் மௌனித்த பத்து வருடங்களுக்குப் பிறகும் கூட புலிகளையும் தமிழீழ மக்களையும் ராஜீவ்காந்தி  கொலையுடன்  தொடர்புபடுத்துவதை காணும்பொழுது இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்க செய்யப்பட்ட சதி திட்டமாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

tamil eelam viduthalai pulikal (LTTE) press release regarding rajiv assassination

தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ராஜீவ்காந்தி  படுகொலைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியிருக்கிறது ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள் விடுதலை  புலிகளின் வெளியுறவு பொறுப்பாளராக இருந்த கிட்டு இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.  இவ்வறிக்கை அப்போது இந்திய நாளேடுகளில் வெளியானது. கொழும்பில் பிபிசி நிருபராக இருந்த கிரிஸ் மோரிஸ் யாழ்ப்பாணத்தில் 1991 செப்டம்பர் 1 இல் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் நேர்காணல் கண்டபோது ராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை  எனத் தெளிவாக கூறினார் பிரபாகரன்.  10 ஏப்ரல் 2002 இல் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர்க்கள் சந்திப்பு ஒன்றில் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, அது ஒரு துன்பியல் இன்று பிரபாகரன் பதிலளித்தார்.

tamil eelam viduthalai pulikal (LTTE) press release regarding rajiv assassination

தமிழீழ மக்களின் விடுதலைப் போரை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திய அரசு 90களின் தொடக்கத்தில் தமிழீழ மக்களின் உறுதிமிக்க ஒரே கொள்கை இறையாண்மை கொண்ட தமிழீழ அரசு என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பின்புதான்,  எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து,  சிங்கள இனவாத ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போரில் எமக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது.இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அம்மையார் இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே என இந்திய அரசின் கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார். இனப்படுகொலைக்கு தீர்வு விடுதலையே என்பதை புரிந்தவராக அப்போது இந்திரா காந்தி அம்மையார் இருந்தார், என்பதையே அவரின் நாடாளுமன்ற உரை தெளிவுபடுத்துகிறது.  இந்திய பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் மறைவுக்குப் பின்பும் அவரது புதல்வரான இந்திய முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவை பேணி வந்துள்ளார். என்பதையும் இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறோம்.  இந்திய அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் உள் நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும் அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் இந்திய பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை என உறுதியாக கருதுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ் காந்தி  படுகொலை பழி உடனடியாக துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் அதனால் புலிகள் மீதான களங்கம் நீங்கும்.

tamil eelam viduthalai pulikal (LTTE) press release regarding rajiv assassination

அதனால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும்  என்றும்,  எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காலம் கனியும்  என்றும் நம்புகிறோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனக்கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம் மற்றும்  அரசியல்துறை பிரதிநிதி குருபரன் குருசாமி என்பவரின் பெயரிலும் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios