விமானத்தில் பயணித்த பெண்ணிடம் சிலுமிஷம் தமிழர்! அதிரடியாக தீர்ப்பு வழங்கிய அமெரிக்க நீதிமன்றம்!
விமானத்தில் பயணம் செய்தபோது, அருகில் இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வாலிபருக்கு, அமெரிக்க நாட்டின் நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
விமானத்தில் பயணம் செய்தபோது, அருகில் இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வாலிபருக்கு, அமெரிக்க நாட்டின் நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
தமிழகத்தை சேர்ந்தவர் பிரபு ராமமூர்த்தி (35). விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்த பின்னர், கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவில் இன்ஜினியராக வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு எச்-1 பி விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து சில ஆண்டுகள், அமெரிக்காவில் இருந்த அவருக்கு, தமிழகத்தில் வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தமிழகம் வந்ததும், அவருக்கு திருமணம் முடிந்தது. இதைதொடர்ந்து அவர், தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்பட்டார்.
இதையொட்டி, கடந்த ஜனவரி 3ம் தேதி லாஸ் வேகாசில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு சென்ற விமானத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தனது இருக்கையில் அருகில், தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளார். அதில், அந்த பெண்ணின் ஆடையில் உள்ள பட்டன்கள், ஜிப் கழற்றப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து, இளம்பெண் கொடுத்த புகாரின்படி போலீசார் , பிரபு ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. அதில், 11 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபு ராமமூர்த்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. நற்பெயருடன் வாழ்வதாக வாதாடினார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.